அமுதகலசம்

அமுதகலசம்

Tuesday, 17 June 2014

Sidhar Bashanam: பாஷாண வகைகள்

Sidhar Bashanam: பாஷாண வகைகள்: இயற்கை பாஷாணங்கள் (01) கற்கடக(ம்) பாஷாணம்         (02) கோளக(ம்)  பாஷாணம் (03) சூத(ம்)       பாஷாணம் (04) அரிதார(ம்)  ...

– வங்க ஜெயநீர்

– வங்க ஜெயநீர்

தமிழ் சகா : கருப்பட்டி

தமிழ் சகா : கருப்பட்டி:    பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆ...

Monday, 16 June 2014

amudhakalasam அமுதகலசம் | அமுதகலசம்

amudhakalasam அமுதகலசம் | அமுதகலசம்

ANCIENT SECRETS AND SIDHARS: காயத்ரி மந்திரத்தின் மூலம் சூஷ்ம சக்திகளை விழிப்பி...

ANCIENT SECRETS AND SIDHARS: காயத்ரி மந்திரத்தின் மூலம் சூஷ்ம சக்திகளை விழிப்பி...: காயத்ரி மந்திரத்தின் மூலம் சூஷ்ம சக்திகளை விழிப்பித்தல் குருதேவரிடம் கற்ற குறிப்புகளின் படி... மனிதன் தனது வாயால் உச்சரிக்...

ANCIENT SECRETS AND SIDHARS: Siddhar Jeeva Samadhi in and around chennai

ANCIENT SECRETS AND SIDHARS: Siddhar Jeeva Samadhi in and around chennai: Dear friends Around 50  Siddhar Jeeva Samadhi in and around chennai  - To have the feel of temple and easy for the new person to reach t...

ANCIENT SECRETS AND SIDHARS: சித்தவித்தைக்கான மாணவனின் தகுதி - ஞானம் – 01

ANCIENT SECRETS AND SIDHARS: சித்தவித்தைக்கான மாணவனின் தகுதி - ஞானம் – 01: ஞானம் – 01: சித்தவித்தைக்கான மாணவனின் தகுதி ஓம் அகஸ்திய மாமகரிஷி குருவே நமஹ மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு வ...

ANCIENT SECRETS AND SIDHARS: சித்த வைத்தியத்தில் பாஷாணம், இரசவாதம் பற்றிய உண்மை...

ANCIENT SECRETS AND SIDHARS: சித்த வைத்தியத்தில் பாஷாணம், இரசவாதம் பற்றிய உண்மை...: நேற்றைய பதிவில் இரசத்தின் தன்மைகள் பற்றி பார்த்தோம் இன்றைய பதிவில் பூரம் எனப்படும் பஞ்சசூதங்களில் ஒன்றைப்பற்றி பார்ப்போம். இது...

சித்த வைத்தியத்தில் பாஷாணம், இரசவாதம் பற்றிய உண்மை விளக்கம் - 01

சித்த வைத்தியத்தில் பாஷாணம், இரசவாதம் பற்றிய உண்மை விளக்கம் - 01



இந்தக்கட்டுரை வாசகர்களிடையே விழிப்புணர்வு நோக்கம் கொண்டு எழுதப்படுகிறது. ஏனெனில் தற்காலத்தில் சித்தர் பாடல்களைபடித்துவிட்டு தமக்கு தெரிந்த பொருளில் விளக்கம் கூறி வருகின்றனர். உண்மையில் பாஷாணங்கள் சித்தர்கள் எப்படி பயன் படுத்தினார்கள் என்பது பற்றிய  விஞ்ஞான விளக்கம் பற்றி இதில் பார்ப்போம். 

சித்தர்கள் பாடலில் வைத்தியத்திற்காக பல உலோகங்களும், உலோக உப்புகளும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இவற்றைத்தான் பாஷாணங்கள் என்று கூறுகிறார்கள். பாஷாணங்கள் என்றால் "விஷம்" என்று பொருள் படும். அதாவது தகுந்த சுத்திகரிப்பு முறையின்றி உட்கொள்ளப்பட்டால் பல்வேறு கொடிய வியாதிகளையும், மரணத்தையும் ஏற்படுத்தவல்லது. இவற்றிற்கு சித்தர் பாடல்களில் சுத்திமுறை கூறப்பட்டுள்ளது. இதனை நேர்பொருளில் பார்க்கும் பல (தற்காலத்து) புரவலர்கள் அதன் படி சுத்தி செய்ததாக கூறி தம்பட்டம் அடித்துக்கொள்கின்றனர். யாராவது எடுத்துக்கூறமுற்பட்டால் அதேசித்தர் பாடல்களில் தமக்கு சாதகமான பாடல்கள் ஒன்றிரெண்டை எடுத்துக் கூறி ஆணவம் கொள்கின்றனர். ஆனால் உண்மையில்சித்தர்கள் ஆணவம் மனதுக்கேறிய மனிதர்கள் இது போன்ற விடயங்களில் மனதினை செலுத்தி தம் மனதினை பக்குவப்படுத்த வேண்டியே சித்துக்களும் இரசவாதமும் செய்தார்களேயன்றி இயற்கைக்கு முரணான விடயங்கள் எதுவும் தமது பெயர் புகழுக்காக செய்தார்களில்லை. மனமயக்கம் கொண்டவர்களுக்கு சித்துக்களும் இரசவாதமும் பெரிய விடயங்களாக தெரியும்.

சரி பாஷாணங்கள் எவையெனப்பார்ப்போம்; குணபாடத்தின் படி தாதுப்பொருட்கள் நாலு வகைப்படும் 
  1. உலோகங்கள் - தங்கம், வெள்ளி, ஈயம் முதலான எட்டு உலோகங்கள் கூறப்பட்டுள்ளது. 
  2. உப்புகள் - இயற்கை உப்பு பத்து, செயற்கை உப்பு பதினைந்து
  3. பாஷாணங்கள் - இயற்கை பாஷாணம் முப்பத்தியிரெண்டு, செயற்கை பாஷாணம் முப்பத்தியிரெண்டு
  4. உபரசங்கள் - நூற்றியிரண்டு


இந்த நாலு வகைகளுமே இரசவாதத்திற்கு முக்கியத்துவமாக கூறப்படுவன. இவற்றுள் முக்கியமான விடயம் என்னவென்றால் இவைசித்தர்களின் பகுப்பு முறை, இவற்றை நமது நவீன பகுப்பு முறை பெயர்களுடன் ஒப்பிட்டால் வீண்குழப்பம் தான் மிஞ்சும். இதிலிருந்து ஒரு விடயத்தினை அறிந்து கொள்ளவேண்டும், இவை குழுக்குறி, அந்த குழுவைச்சார்ந்தவர்களுக்கே உண்மை விளங்கும். இல்லவிட்டால் பெருங்குழப்பம் தான். இதற்கு நல்ல நகைச்சுவை கதையொன்று உளது. பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டினை சுற்றிப்பார்க்க வந்த ஆங்கிலேயர் ஒருவர் வினோதமான குறிப்பொன்றை எழுதிவைத்துள்ளார்; "இந்தியாவில் ஆற்றங்கரையோரமுள்ள பாறாங்கற்களை துணிகளால் பிளக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததை கண்டேன்" என்று, உங்களுக்கு விளங்க்கியிருக்கும் என்று நினைக்கிறேன், சலவையாளர் ஒருவர் துணிதோய்ப்பதைதான் இவ்வாறு வியாக்கியானப்படுத்தியிருக்கிறார். 

சரி விடயத்திற்கு வருவோம், மேற்குறிப்பிட்ட தாதுக்கள் அனைத்தையும் பற்றியும் இங்கு ஆராயமுடியாது, முக்கியமான பாதரசம் பற்றிம் அதனுடன் தொடர்புடைய பூரம், வீரம் பற்றி மாத்திரம் ஆராய்வோம். 

பாதரசம்:
தூய பாதரசம் (Mercury), இதுதான் இரசவாதத்தின் அடிப்படையாக உள்ளது. இதனை கட்டத்தெரிந்தவன் அனைத்து உலோகங்களையும் உண்டாக்கும் வல்லமை உடையவனாகிறான் என்கிறார்கள் சித்தர்கள். (இது மறை பொருளான வாசகம்) இதன் சிறப்பு எண்ணிலடங்காததாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சரி இது பற்றி நவீன விஞ்ஞானம் என்ன கூறுகினறது என்று பார்ப்போம்.  

Mercury is the only metal that is liquid at standard conditions for temperature and pressure; With a freezing point of −38.83 °C and boiling point of 356.73 °C, mercury has one of the narrowest ranges of its liquid state of any metal. Mercury dissolves to form amalgams with gold, zinc and many other metals. Because iron is an exception, iron flasks have been traditionally used to trade mercury. Other metals that do not form amalgams with mercury include tantalum, tungsten and platinum. When heated, mercury also reacts with oxygen in air to form mercury oxide, which then can be decomposed by further heating to higher temperatures. Since it is below hydrogen in the reactivity series of metals, mercury does not react with most acids, such as dilute sulfuric acid, though oxidizing acids such as concentrated sulfuric acid and nitric acid or aqua regia dissolve it to give sulfate, nitrate, and chloride salts. Like silver, mercury reacts with atmospheric hydrogen sulfide. Mercury even reacts with solid sulfur flakes, which are used in mercury spill kits to absorb mercury vapors (spill kits also use activated carbon and powdered zinc)

ஆக இரசம் என்பது தங்கம், ஈயம் என்பவற்றுடன் கலப்படையக்கூடியது. கலப்படையும் விகிதாசாரத்திற்கேற்ப அது தங்கமாகவோ அல்லது வெள்ளியாகவோ தோற்றமளிக்ககூடியது. 

இதனை உட்கொள்வதால்/முகர்வதால், தொடுகையுறுவதால் வரும் உடல் கேடுகள் பின்வருமாறு அறியப்பட்டுள்ளது; 

  • The World Health Organization, OSHA, and NIOSH all treat mercury as an occupational hazard, and have established specific occupational exposure limits.
  • Medical Case control studies have shown effects such as tremors, impaired cognitive skills, and sleep disturbance in workers with chronic exposure to mercury vapor even at low concentrations in the range 0.7–42 μg/m3.
  • A study has shown that acute exposure (4 – 8 hours) to calculated elemental mercury levels of 1.1 to 44 mg/m3 resulted in chest pain, dyspnea, cough, hemoptysis, impairment of pulmonary function, and evidence of interstitial pneumonitis.
  • Acute exposure to mercury vapor has been shown to result in profound central nervous system effects, including psychotic reactions characterized by delirium, hallucinations, and suicidal tendency. Occupational exposure has resulted in broad-ranging functional disturbance, including erethism, irritability, excitability, excessive shyness, and insomnia.
  • With continuing exposure, a fine tremor develops and may escalate to violent muscular spasms. Tremor initially involves the hands and later spreads to the eyelids, lips, and tongue. Long-term, low-level exposure has been associated with more subtle symptoms of erethism, including fatigue, irritability, loss of memory, vivid dreams, and depression.


இவ்வாறான கொடிய விஷமுள்ள இரசத்தினை சுத்தி செய்வதற்கு பயன்படுத்தும் முறை கீழ்வருமாறு குணபாடத்தில் விபரிக்கப்பட்டுள்ளது; 

ஒரு பலம் (35 கிராம்) இரசத்தினை செங்கல் மாத்தூளிலும், மஞ்சள் பொடியிலும் ஒவ்வொருமணி நேரம் ஆட்டி, சுத்த நீரில் கழுவி, ஒரு படி (1.3 லீற்றர்) மேனிச்சாற்றிலிட்டு அடுப்பிலேற்றி சாறு சுண்டும்படி எரித்து எடுத்தால் சுத்தியாகும். 

இதிலுள்ள ஒவ்வொரு பொருளினது இரசாயனவியற் பண்புகளை பார்ப்போம்;
  •  செங்கல் மாத்தூள் - contain 30-40% aluminium oxide or alumina and 50% silicon dioxide or silica. 
  •  மஞ்சள் (Curcuma longa): Turmeric contains up to 5% essential oils and up to 5% curcumin, a polyphenol. Curcumin is the active substance of turmeric and curcumin is known as C.I. 75300, or Natural Yellow 3. The systematic chemical name is (1E,6E)-1,7-bis(4-hydroxy-3-methoxyphenyl)-1,6-heptadiene-3,5-dione.
  •  குப்பைமேனிச்சாறு (Acalypha indica): Alkaaloids “acalypus” and “acalyphine.


இவற்றை சேர்த்து அரைக்கும் போது எந்தவகையான இரசாயனவியல் மாற்றம் நிகழ்ந்தாலும், உடலுக்குள் உட்கொள்ளும் போது அது இரசத்தினை கொண்டிருக்கும். அது கட்டாயம் உடலினை பாதிக்கும். 

 அடுத்த பதிவில் பூரம் பற்றி பார்ப்போம்.

Sunday, 15 June 2014

WHO IS YOUR GOD ?: Kunangudi Masthan Sahib Appa Paadalgal

WHO IS YOUR GOD ?: Kunangudi Masthan Sahib Appa Paadalgal:                         பார்க்கப் பலவிதமாய்ப் பல்வகண்டந் தன்னையடை காக்குந் திருக்கருணைக் கண்ணே ரகுமானே. ஈறு முதலுமற்றே யியங்குகின்ற முச்...

Saturday, 7 June 2014

Teen Dances To Michael Jackson's 'Billie Jean' At Talent Show

Names of common vegetables and pulses in English, Hindi, Malay and Tamil languages

English NameHindi NameTamil NameMalay Name
A
AmaranthChauli, Chavleri Sagசிறு கீரை, முளைக்கீரைBayam
Ash Gourd, winter melonपेठा Pethaநீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய்kundur
B
BeetrootChakundarபீட்ரூட்Ubi Bit
Bitter Gourdकरेला Karelaபாகற்காய், பாவக்காய்Peria
Black Lentilऊरद Uradஉளுந்து
Black Pepperकाली मिर्च Kali mirchமிளகுLada Hitam
Black-eyed pea, cowpeaलोबिया Lobiaகாராமணி, தட்டாப் பயறு
Bottle Gourd/Calabashघिया, लौकी, Louki, Dudhi, Ghiyaசுரைக்காய்Labu
Broad beanspaapidiஅவரைக்காய்
C
Cabbageपत्तागोभी Patta Gobhi, Band Gobhiமுட்டைக்கோசுKubis
Capsicum / Bell Pepperशिमला मिर्च Shimla Mirchகுடை மிளகாய்
Carrotगाजर Gaajarகேரட், காரட்
Cauliflowerफूल गोभी Phul Gobhiபூக்கோசுKubis Bunga
celeryआजमोदा ajamodaஆஜ்மோடா, ஓமஇலை
Chilli, Green chilliहरी मिर्च Hari mirchபச்சை மிளகாய்Cili Hijau, cabi Hijau, Cili Padi
Chilli, Red chilliलाल मिर्ची Lal mirchசிவப்பு மிளகாய், வற்றல் மிளகாய்
Cluster Beans, French Beansगवार फली Guar phaliகொத்தவரங்காய்
Corn, Indian Corn, Maizeमक्का Makkaமக்காச் சோளம்
Cucumberखीरा / ककड़ी, Kheera, Kakadiவெள்ளரிக்காய்Timun
Curry Leafमीथ णीम पत्ता Kadipattaகறிவேப்பிலைDaung curry
D
Drumstickसेंजन Sahjanமுருங்கைக்காய்
E
Eggplant, Aubergine, Brinjalबैगन Bainganகத்தரிக்காய், கத்திரிக்காய்terung
F
French beanFaras beanபீன்ஸ்
G
Garbanzo Beans, Chickpea, Bengal Gramचना Chanaகொண்டைக் கடலை
Garlicलहसुन Lehsunபூண்டு, வெள்ளைப் பூண்டுBawang puteh
Gingerअदरक Adrakஇஞ்சிHalia
Chickpea flour, Gram flourबेसन Besanகடலை மாவு
Green Gramमूंग Moongபச்சைப்பயறு, பாசிப்பயறு
I
Ivy Gourd, Little Gourdकुन्द्रू Tindora, Kunduruகோவைக்காய்
J
Jackfruitकटहल KatahalபலாCempadak, Nangka
K
Kohlrabi Turnipशलगम Gaanth Gobhiநூக்கோல், நூல் கோல்
L
Lady's fingerभिन्डी Okra, Bhindiவெண்டைக்காய்kacang benki, sayur bendi, kacang lendir
Lotus stemभेइन Beinதாமரைத் தண்டு
Lotus rootkanwalதாமரை வேர்serata, ubi teratai
M
mushroomकुम्भी kumbiகாளான்Cendawan
mustard greensसरसों पत्ता Sarasan pattaகடுகுக் கீரைSawi
O
Onionप्याज Pyaajவெங்காயம்Bawang
P
Peanut, Groundnutमूँगफली Moong Phaliநிலக்கடலை, வேர்க்கடலை
Peasमटर Mattarபட்டாணி
peppermint leavesपुदीना pudinaபுதினாDaun Pudina Kodak, daun kesom
Plantainकेला Kelaவாழைக்காய்
Potatoआलू Aaluஉருளைக் கிழங்குUbi Kentang
Pulsesदाल Dalபருப்பு
Pumpkinकद्दू Kadduபூசணிக்காய், பரங்கிக்காய்Labu Merah
R
Radishमूली Mooli, muliமுள்ளங்கிlobak putih, lobak, lobak isi
Ridged gourdतोरी Turai, Toriபீர்க்கங்காய்petola segi, ketola
S
Snake Gourd, pointed gourdPadwal, Chichingaபுடலங்காய்
Spinachपालक Paalakபசலைக்கீரை, முளைக்கீரைBayam
Spring onionharaa pyaazaவெங்காயத்தாள்daun bawang
Sweet Potatoशकर कन्द Shakkar Kandiசர்க்கரைவள்ளிக் கிழங்குubi keledek, ubi kastela, ubi keladi
T
Tamarindइमली ImliபுளிAsam Jawa, Assam Jawa
Tomatoटमाटर Tamaatarதக்காளிTomato
Tapiocashimlaa aalooமரவள்ளிக்கிழங்குubi kayu
Turmericहल्दी Haldiமஞ்சள்Kunyit
Y
Yam, Taroज़िमीकंद Jimikandசேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்குKeladi

பசலைக்கீரை (spinach)

கொடிப்பசலை...
தாவரப்பெயர் : PORTULACA QUADRIFIDA
(http://en.wikipedia.org/wiki/Portulaca_oleracea)
தாவரக் குடும்பம் : PORTULACACEAE
கொடிப்பசலை.!
வாழ்க்கைக்கு மிகவும் ஜீவாதாரமாக இருப்பவை கீரைகள்.அவை நீண்ட ஆயுளைப் பெறுவதற்கு உதவுகின்றன. வாழ்க்கைக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ஊட்டச் சக்தியாக கீரைகளிலும் காய்கறிகளிலும் இயற்கை வழங்குகின்றது.. உணவு நிபுணர்கள் பசலைக்கீரைக்கு முதல் இடம் வழங்கியுள்ளனர். பசலையில் செடிப்பசலை என்ற இனம் உண்டு.
இலங்கையிலிருந்து வந்ததால் சிலோன்கீரை என்றும் அழைப்பர். இதன் இலைகள் சிறிதாக எதிர் அடுக்கில் இருக்கும். இதன் தண்டைக் கிள்ளி வைத்தால் வளரும். மற்றொன்று தரைப்பசலை என்பது. பசலைக்கீரை இலையாக அமைந்த கறியாகும். அதில் இரும்பு சத்து ஏராளமாக உள்ளது, இனவே இரத்தம் குன்றியுள்ள சோகை நோயாளிகளுக்கு அது மிகவும் நன்மை தருகின்றது.
பசலைக்கீரை மிகுந்த ஊட்டச்சத்து உள்ள மருந்தாகும் இதில் பெரும் அளவில் வைட்டமின் சத்துக்கள் உள்ளன, சுண்ணாம்புச்சத்து உள்ளது,இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களுக்கு உதவும் சிவப்புச்சத்து (ஹிமொகுளோபின்) உள்ளது. புரதங்களைப் பலப்படுத்தும் அமிலங்கள் உள்ளன. அது நம்மைப் பேணிப் பாதுகாக்கும் உணவு. அதில் காரசத்துள்ள தாதுப் பொருள்கள் ஏராளமாக உள்ளன. ஆதலால் அது தொத்து நோயிக்கு எதிர்பான தடுப்புச் சக்தியை மிகவும் ஆற்றலுடன் பேணுகின்றது.
பசலைக்கீரையை உட்கொண்டால் எரிச்சலூட்டும் ஒரு வகை நச்சு அமிலச்சத்து மிகமிகச் சிறிய அளவில் உண்டு. தண்ணீரில் கரையக்கூடிய ஒரு வகைப் புரதச்சத்தும் இதில் மிகமிகச்சிறிய அளவில் உண்டு. ஆனால் வைட்டமின் சத்துக்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி ‘ ஆகியனவும், பொட்டாசிய உப்பின் காரச்சத்தும் ஏராளமாக உள்ளன. வைட்டமின் ‘ஏ’ பார்வைக் கோளாரைக் குணப்படுத்தும், இரத்த விருத்தி உண்டாக்கும்.
இதில் உள்ள இரும்புச் சத்து மிகவும் சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகின்றது. சோடியம், போலாசின், கால்சியம் உள்ளன ஆனால் கொழுப்பு சத்துக்கிடையாது. பசலைக்கீரை மிகவும் சுலபமாக செரிகின்றது, குளிர்ச்சி தருகின்றது, ஊட்டச்சத்து உள்ளது. எரிச்சலைத் தணிக்கின்றது, மிக உயர்ந்த உணவாக உள்ளது. பித்தம், நீர்தாரை, வெட்ட நோய்கள் குணமாகின்றன. தோல்நோய்கள், மேகம், சீதபேதி குறைகின்றது.
இதன் இலைச் சாற்றுடன் சிறிது தேன் சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்க நீர்கோவை குணமாகும். இந்தக் கீரை சாப்பிடும் போது தாது கெட்டி படும். மூளைக்கு சக்தியைக் கொடுக்கும். இலையை வாட்டி தலையில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும். இதை சிறிதளவு தண்ணீரில் சமைக்க வேண்டும். சமைத்த பின் தண்ணீரை வெளியில் கொட்டிவிடக் கூடாது ஏனெனில் அதில் மிகுந்த ஊட்டச்சத்துப் பொருள்கள் உள்ளன. மிளகு, பூண்டு, தக்காளி சேர்த்து ரசம் வைக்கலாம்.

உத்தாமணி

வேலிப்பருத்தி. : வேறு பெயர்கள்-: உத்தம கன்னிகை மற்றும் உத்தாமணி.

  

வேலிப்பருத்தி.

1) மூலிகையின் பெயர் -: வேலிப்பருத்தி.
2) தாவரப்பெயர் -: DAEMIA EXTENSA.
3) தாவரக்குடும்பம் -: ASCLEPIADACEAE
4) வேறு பெயர்கள்-: உத்தம கன்னிகை மற்றும் உத்தாமணி.
5) பயன் தரும் பாகம் -: இலை,வேர் முதலியன.

6) வளரியல்பு -: தமிழகமெங்கும் வேலிகளில் தானே படர்ந்து வளர்கிறது. இதயவடிவ இலைகளை மாற்றடுக்கில் கொண்டு பசுமை நிற வெகுட்டல் மணமுடைய பூங்கொத்துக் களையும் மென்மையான முட்களைக்கொண்ட இரட்டைக் காய்களையும், பாலுள்ள பிசுபிசுப்பான ஏறுகொடி. முட்டைவடிவ விதைகளில் பட்டுப் போன்ற பஞ்சுகள்காணப்படும். இதனை உந்தாமணி என்றும்குறிப்பிடுவதுண்டு.காய்கள் காய்ந்து வெடித்துப் பஞ்சுகளுடன் விதையும் சேர்த்துப் பறந்து சென்று வேறு இடங்களில் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.

7) மருத்துவப்பயன்கள் -: இது நெஞ்சிலே இருக்கின்ற கோழையை அகற்றி வாந்தியை உண்டாக்குவதோடு புழுக்களைக் கொல்லும் தன்மையுடையது.

இதன் இலையை இடித்துப் பிழிந்த சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் அருந்தி வர ஆஸ்த்துமாவுக்கும் பாம்புக் கடிகளுக்கும் குணம் ஏற்படும்.

நாள்பட்ட புண்களுக்கு இதன் இலையை அரைத்துக் கட்டி வந்தால் புண்கள் எளிதில் ஆறும்.
பெண்களுக்கு மாதவிலக்கின் போது உண்டாகும் வயிற்று வலிக்கு வேலிப் பருத்தி இலைச்சாற்றைத் தேனுடன் கலந்து அருந்தி வர குணம் தரும்.

குழந்தைகளுக்கு வயிற்றில் புழுத் தொந்தரவு அதிகமாக இருந்தால் இதன் இலையைக் குடிநீரிட்டு ஒரு பாலாடை அளவு கொடுத்து வர புழுக்கள் வெளியாகும்.

கால் வீக்கங்களுக்கும், உடம்பில் அடிபட்ட வீக்கங்களுக்கும், இதன் இலைச் சாற்றையும், சுண்ணாம்பையும் கலந்து பூசி வர அவை குணமாகும்.

இதன் இலைச்சாற்றுடன் தேன் கலந்து அருந்தி வர இருமல் தணியும்.

இதன் இலையை நன்கு அரைத்து எடுத்த விழுதை நகச்சுற்று, கண்ட மாலை இவைகளுக்குப் பற்றிட்டுவர நல்ல குணம் தரும்.

காணாக்கடி, அரிப்பு, தடிப்புக்கு இதன் இலைச்சாறு தடவலாம்.

இலையை வதக்கித் துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கக் கீல் வாதம், முடக்கு வாதம், வாதக் கடைச்சல், இடுப்புவலி மிதலியன குணமாகும்.

இலைச்சாற்றுடன் சுக்கு, பெருங்காயம்,பொடித்துக் காயச்சி இளஞ்சீட்டில் பற்றிட வாத வலி, வீக்கம் குணமாகும், யானைக்கால் நோய்தொடக்க நிலையில் இருந்தால் 40,50 நாள்களில் குணமாக்கலாம்.

இதன் வேரை உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 சிட்டிகை வரை பாலில் கொடுக்க குழந்தைகளின் வாயுத் தொல்லைகள் நீங்கிப் பேதியாகும், பூச்சி, கிருமிகள் சாகும்.
இதன் இலைச்சாற்றில் 7முறை மிளகை ஊறவைத்து வெய்யிலில் உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 அரிசி எடை பால் அல்லது தேனில் கொடுக்கக் குழந்தைகளின் செரியாமை, வாந்தி, மந்தம், மாந்த இழப்பு, கை,கால் சில்லிட்டுப் போதல், சுரம் முதலிய சகல குழந்தை வியாதிகளுக்கும் கொடுக்கலாம்.

5 கிராம் வேரைப் பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டிக் காலை மட்டும் 3 நாள் கொடுக்க நஞ்சுக் கடி, கரப்பான், கிரந்தி, சூலை, பிடிப்பு, வாயு முதலியவை போகும்.
உந்தாமணி, பொடுதலை, நுணா,நொச்சி ஆகியவற்றின் இலைகளைவகைக்கு 1 பிடி வதக்கிப் பிழிந்த சாறு 10 மி.லி. கொடுக்கச் சளியோடு கூடிய மாந்தம் தீரும்.

தக்க வயதடைந்தும் பெண் ருதுவாகாவிட்டால் வேலிப்பருத்தி இலைகள் ஆறு எண்ணம் எடுத்துச் சுத்தப்படுத்தி மூன்று மிளகு சேர்த்து அம்மியில் மைபோல் அரைத்து கழற்சிக்காய் அளவு பத்து தினங்கள் தொடர்ந்து உடகொண்டு வர ருதுவாகாத பெண்கள் ருது ஆவார்கள்.

'ஆலித் தெழுந்தநோ யத்தனையும் தீருமேவேலிப் பருத்தியதன் மெல்லிலையால்-வேலொத்துக்கண்டிக்கும் வாதஞ்சன்னி தோஷ மும்போமுண்டிக்கும் வாசனையா மோது'

'உத்தா மணியிலையா லும்வயிற்றுக் குன்மமொடுகுத்தாம் வலியும் குளிரும்போம்-பற்றிதுதியதன்று சொறிசிரங்குந் தொல்லுலகில் நாளும்புதியன் மூலின் புகல்.'
 --போகர்.
 

வேலிப்பருத்தி. : வேறு பெயர்கள்-: உத்தம கன்னிகை மற்றும் உத்தாமணி