அமுதகலசம்

அமுதகலசம்

Saturday, 25 October 2014

வேதியியல் - - தாதுப் பொருட்கள் * மேக்னடைட்...

(1) வேதியியல் - - தாதுப் பொருட்கள் * மேக்னடைட்... - Enlightening Candles

வேதியியல் - - தாதுப் பொருட்கள்
* மேக்னடைட் ஹேமடைட், சிட்ரைட், லிமோடைட், இரும்பு கந்தகக்கல் ஆகியன இரும்பின் தாதுக்களாகும்.
* ரூடைல், இல்மடைட் ஆகியவை டைட்டானியத்தின் தாதுக்களாகும்.
* பிச்சு பிளெண்ட், கார்னோடைட் ஆகியன யுரேனியத்தின் தாதுக்கள்.
* ஜிர்கான், பேடிலைட் ஆகியன ஜிர்கோனியத்தின் தாதுக்கள்.
* கார்னோடைட், பேட்ரோனைட், வெனடினைட் ஆகியன வனேடியத்தின் தாதுக்களாகும்.
* பைரோலுசைட், ஹிஸ்மனைட், மாங்கனைட் ஆகியவை மாங்கனீன் தாதுக்கள்.
* குரோடைட், குரோகாயிசைட் ஆகியன குரோமியத்தின் தாதுக்களாகும்.
* பெண்டலன்டைட், சோனபைட், குப்பல் நிக்கல் அல்லது நிக்கோலைட், கார்னிரைட் ஆகியன நிக்கலின் தாதுக்கள்.
* பாக்சைட், கிரியோலைட், பெல்ஸ்பார் ஆகியன அலுமினியத்தின் தாதுக்கள்.
* மாலகைட், தாமிரபைரைட், காப்பர் கிளான்ஸ், க்யூப்ரைட் ஆகியவை தாமிரத்தின் தாதுக்கள்.
* சின்னபார் என்பது பாதரசத்தின் தாதுவாகும்.
* கலீனா, துத்தநாக கந்தகக் கல் ஆகியவை கந்தகத்தின் தாதுப் பொருட்கள்.
* காலமின், சிங்கைட் ஆகியவை துத்தநாகத்தின் தாதுப் பொருட்கள்.
* டாலமைட், ஜிப்சம், ஃப்ளூரோஸ்பார், சுண்ணாம்புக்கல் ஆகியவை கால்சியத்தின் தாதுக்கள்.
* மேக்னசைட், டாலமைட், கார்னலைட், எப்சம் உப்பு ஆகியவை மெக்னீசியத்தின் தாதுக்கள்.
* கேசிட்டரைட் அல்லது டின்ஸ்டோன் எனப்படுவது வெள்ளீயத்தின் தாதுப்பொருளாகும்.
* கயோலின், பெல்ஸ்பார் ஆகியன சிலிகானின் தாதுப் பொருட்கள்.
* சில்வனைட், காரனைட், சால்ப் பீட்டர் ஆகியவை பொட்டாசியத்தின் தாதுப்பொருட்கள்.
* சாதாரண உப்பு மற்றும் சிலிசால்ட் பீட்டர் ஆகியவை சோடியத்தின் தாதுப் பொருட்கள்.
* ஸ்பெரிலைட், க்யூப்ரைட், பிராக்கைட் ஆகியவை பிளாட்டினத்தின் தாதுப் பொருட்களாகும்.
* அர்ஜெண்டைட், குளோரார்ஜிரைட், பெரார்ஜிரைட் ஆகியவை வெள்ளியின் தாதுப் பொருட்கள் ஆகும்.
* கலீனா, செருசைட் ஆகியவை காரீயத்தின் தாதுக்கள்.
* சில்வனைட், காலவரைட், பிஸ்மத் ஆரைட் ஆகியவை தங்கத்தின் தாதுப் பொருட்கள்.
உலோகக் கலவைகள்
* டியூராலுமினியத்தில் 95 சதவீதம் அலுமினியமும், 4 சதவீத செம்பும் உள்ளது.
* அல்நிக்கோ என்பது அலுமினியம், நிக்கல், கோபால்ட் சேர்ந்த கலவையாகும்.
* பிட்டானியா உலோகம் என்பது 93 சதவீத தகரமும், 5 சதவீத அண்டிமணியும், 2 சதவீத செம்பும் கொண்ட கலவையாகும்.
* 90 சதவீத தகரம், 7 சதவீத அண்டிமணி, 3 சதவீத செம்பும் கொண்ட கலவை பாபிட் உலோகம் எனப்படும்.
* 64 சதவீத இரும்பும், 36 சதவீத நிக்கல் கொண்ட கலவை இன்வார் எனப்படும் நிக்கல் கலவையாகும்.
* மோனா உலோகம் என்பது 67 சதவீத நிக்கல் மற்றும் 28 சதவீத செம்பு கொண்ட கலவையாகும்.
* பித்தளை என்பது 60 முதல் 90 சதவீத செம்பும், 10 முதல் 40 சதவீத துத்தநாகமும் கொண்ட கலவையாகும்.
* 80 சதவீத செம்பும், 20 சதவீத தகரமும் கொண்டது பெல் உலோகம் எனப்படும்.
* ஜெர்மன் வெள்ளி எனப்படும் கலவையில் செம்பு, துத்தநாகம், நிக்கல் ஆகியவை காணப்படும்.
* 90 சதவீத செம்பும், 10 சதவீத துத்தநாகமும் கொண்டது பிரான்ஸ் தங்கம் ஆகும்.
* கன் மெட்டல் அல்லது கன் உலோகம் என்பது 89 சதவீத செம்பும், 10 சதவீத தகரம் மற்றும் 1 சதவீத துத்தநாகமும் கொண்டதாகும்.
* எவர்சில்வர் என்பது இரும்பு, குரோமியம், நிக்கல் கலந்த கலவையாகும்.
கார்பன்
* முக்கிய தனிமங்களுள் கார்பனும் ஒன்று. இது ஒரு தனித்தன்மை வாய்ந்த தனிமம்.
* தாவரமோ அல்லது விலங்கோ எதுவாயினும் அதில் கார்பன் உள்ளது. இயற்கையில் காணப்படும் நிலக்கரி, பெட்ரோலியம், பளிங்கு கல் மற்றும் சுண்ணாம்புக் கல் போன்றவற்றில் கார்பன் உள்ளது.
* கார்பன் ஒரு அலோகம் அது C என்ற குறியீட்டால் குறிப்பிடப்படுகிறது. கார்போ என்ற இலத்தீன் மொழி சொல்லிலிருந்து கார்பன் என்ற பெயர் வந்தது.
* கார்பன் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று தங்களுக்குள் இணைந்து வெவ்வேறு அளவுடைய சங்கிலித் தொடர்களையும் வளையங்களையும் தோற்றுவிக்கும். கார்பனின் இந்தப் பண்பிற்கு கேட்டினேஷன் என்று பெயர்.
* கார்பனின் சேர்மங்களை அறிந்து கொள்வதற்காகவே வேதியியலில் கரிம வேதியியல் என்று ஒரு தனி பிரிவே உள்ளது.
* புவியின் ஒட்டுப்பகுதியில் 0.03 சதவீத அளவே கார்பன் உள்ளது. வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு உள்ளது.
* இயற்கையில் நிலக்கரி மட்டுமல்லாமல் கிராபைட் மற்றும் வைரம் என்ற இருவகைகளிலும் கார்பன் காணப்படுகிறது. ஃபுல்லரின் என்ற இன்னொரு வகை கார்பனும் கண்டறியப்பட்டுள்ளது.
* புவியின் ஒட்டுப் பகுதியில் கார்பன் பலவகைப்பட்ட பொருட்களில் காணப்படுகிறது.
* பஞ்சு, காகிதம், மரம், சர்க்கரை மற்றும் உணவு வகைகள் போன்ற பொருட்களில் கார்பன் உள்ளது.
* ஒரு தனிமம் ஒரே இயற்பியல் நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்கலில் காணப்படலாம்.
* தனிமங்களின் இத்தகைய பண்பிற்கு புற வேற்றுமை என்றும், பல்வேறு வடிவங்களுக்கு புற வேற்றுமை வடிவங்கள் என்றும் பெயர்.
* இத்தகைய புற வேற்றுமை வடிவங்கள் ஒரே மாதிரியான இயற்பியல் பண்புகளையும் மாறுபட்ட வேதியில் பண்புகளையும் பெற்றுள்ளன.
* கார்பனுக்கு புறவேற்றுமை பண்பு காணப்படுகிறது. கார்பனின் பல்வேறு புற வேற்றுமை வடிவங்களை படிகங்கள் மற்றும் படிக வடிவமற்றவை என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
* கிராபைட்டும், வைரமும் கார்பனின் இரு படிக புற வேற்றுமை வடிவங்களாகும்.
* நிலக்கரி, அடுப்புக்கரி, மற்றும் விளக்குக் கரி ஆகியவை கார்பனின் படிகவடிவமற்ற புற வேற்றுமை வடிவங்கள் ஆகும்.
* கிராபைட் என்பது கருப்பான, மென்மையான மற்றும் வழவழப்பான கார்பனாகும்.
* இயற்கையில் காணப்படும் அனைத்துப் பொருட்களிலும் மிகக் கடினமானது வைரமாகும்.
* 1985-ம் ஆண்டு பக்மினிஸ்டர் புல்லரீன் எனப்படும் கார்பனின் மற்றொரு வகை புற வேற்றுமை வடிவம் கண்டுபிடிக்கப்பட்டது.
கிராஃபைட்
* கிராபைட்டில் கார்பன் அணுக்கள் தட்டையான அடுக்குகளாக அமைந்துள்ளன. ஒவ்வொரு அடுக்கும் கார்பன் அணுக்கள் அடங்கிய அறுகோண வளையங்களால் ஆனது.
* ஒவ்வொரு கார்பன் அணுவும் மற்ற மூன்று கார்பன் அணுக்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது.
* கிராபைட்டின் பல்வேறு அடுக்குகளுக்கிடையே உள்ள பிணைப்பு விசை வலுவிழந்த வாண்டர்வால்ஸ் விசை ஆகும். இந்த அடுக்குகள் ஒன்றின் மீது ஒன்றும் நழுவும் தன்மை உடையது.
* இதனால் தான் கிராபைட் மென்மையாகவும் வழவழப்பாகவும் காணப்படுகிறது. இப்பண்பினால் தான் கிராபைட்டை எந்திரங்களில் உயவுப்பொருளாக பயன்படுத்துகிறோம்.
கிராபைட் கருஞ்சாம்பல் நிறமுடையது, மின்சாரத்தை நன்கு கடத்தும், கிராபைட்டின் உருகுநிலை 3700 டிகிரி செல்சியஸ் ஆகும்.
* மின்கலங்களில் மின்வாய்களாகவும், இயந்திரங்களில் உயவுப்பொருளாகவும், பென்சில் லெட் செய்யவும், வண்ணங்கள் (பூச்சு) தயாரிக்கவும், அணுக்கரு உலைகளில் நியூட்ரானை உறிஞ்சும் பொருளாகவும் (Moderator) கிராபைட் பயன்படுகிறது.
வைரம்
* வைரத்தில் ஒவ்வொரு கார்பன் அணுவும் மற்ற நான்கு கார்பன் அணுக்களுடன் வலுவான விசைகளால் பிணைக்கப்பட்டுள்ளன. இத்தகைய கார்பன் பிணைப்பு முப்பரிமான அளவில் படிகம் முழுவதும் வலுவான வலைப்பின்னல் போல் அமைந்துள்ளது.
* வைரம் நிறமற்ற ஒளி ஊடுருவக் கூடிய பொருள். பட்டை தீட்டப்பட்ட வைரம், ஒளி எதிரொளிப்பு மற்றும் ஒளி விலகல் காரணமாக மிகவும் பளபளப்பாக காட்சியளிக்கிறது.
* வைரத்தின் அடர்த்தி 3.5 கி/செ.மீ3. வைரம் மின்சாரத்தைக் கடத்தாது. கருப்பு வைரத்தைக் கொண்டு கண்ணாடியை வெட்டலாம், பளிங்கு கற்களை அறுக்கலாம், மற்றும் பாறைகளைத் துளை இடலாம். உயர் நுட்ப வெப்பமானிகளில் வைரம் பயன்படுகிறது.

அல்குர் ஆனின் அறிவியல் சான்றுகள்_2 - நூல்கள் - ஆன்லைன் பி.ஜே

அல்குர் ஆனின் அறிவியல் சான்றுகள்_2 - நூல்கள் - ஆன்லைன் பி.ஜே

Monday, 13 October 2014

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும். . *அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது *கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். *வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது *அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. *சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும். *நவால் பவுடர் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது. *வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது. *தூதுவளை பவுடர் :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது. *துளசி பவுடர் :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது. *ஆவரம்பூ பவுடர் :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும். *கண்டங்கத்திரி பவுடர் :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது. *ரோஜாபூ பவுடர் :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும். *ஓரிதழ் தாமரை பவுடர் :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா *ஜாதிக்காய் பவுடர் :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும். *திப்பிலி பவுடர் :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது. *வெந்தய பவுடர் :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது. *நிலவாகை பவுடர் :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும். *நாயுருவி பவுடர் :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது. *கறிவேப்பிலை பவுடர் :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது. *வேப்பிலை பவுடர் :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது. *திரிபலா பவுடர் :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும். *அதிமதுரம் பவுடர் :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும். *துத்தி இலை பவுடர் :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து. *செம்பருத்திபூ பவுடர் :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது. *கரிசலாங்கண்ணி பவுடர் :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது. *சிறியாநங்கை பவுடர் :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது. *கீழாநெல்லி பவுடர் :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது. *முடக்கத்தான் பவுடர் :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது. *கோரைகிழங்கு பவுடர் :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது. *குப்பைமேனி பவுடர் :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது. *பொன்னாங்கண்ணி பவுடர் :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது. *முருஙகைவிதை பவுடர் :- ஆண்மை சக்தி கூடும். *லவங்கபட்டை பவுடர் :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது. *வாதநாராயணன் பவுடர் :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும். *பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். *வாழைத்தண்டு பவுடர் :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது. *மணத்தக்காளி பவுடர் :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும். *சித்தரத்தை பவுடர் :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது. *பொடுதலை பவுடர் :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும். *சுக்கு பவுடர் :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது. *ஆடாதொடை பவுடர் :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது. *கருஞ்சீரகப்பவுடர் :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும். *வெட்டி வேர் பவுடர் :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும். *வெள்ளருக்கு பவுடர் :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும். *நன்னாரி பவுடர் :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது. *நெருஞ்சில் பவுடர் :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும். *பிரசவ சாமான் பவுடர் :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது. *கஸ்தூரி மஞ்சள் பவுடர் :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும். *பூலாங்கிழங்கு பவுடர் :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும். *வசம்பு பவுடர் :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும். *சோற்று கற்றாலை பவுடர் :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும். *மருதாணி பவுடர் :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும். *கருவேலம்பட்டை பவுடர் :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்