அமுதகலசம்

அமுதகலசம்

Thursday, 31 October 2013

இந்த மனம் என்பது என்ன?

இந்த மனம் என்பது என்ன?இந்திரியங்கள் என்பது என்ன?

நாம் எதையும் உணர்வதற்குப் புற உறுப்புகள் பொறிகள்(கண்,காது,நாக்கு,மூக்கு,தோல்) மட்டுமே காரணம் அல்ல.

பார்வைக்கான உண்மையான கருவி கண் அல்ல,இந்திரியங்கள்(மூளை மையங்கள்) எனப்படும் வேறு கருவிகள் உள்ளன.இவையே அவற்றை செய்கின்றன.இந்திரியம்(மூளை மையங்கள்) கெட்டுவிட்டால் புறத்தில் கண் இருந்தாலும் பார்க்கமுடியாது. கண்,காது,மூக்கு,நாக்கு,தோல் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக இந்திரியங்கள் உள்ளன.

இனி மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் என்றால் என்றால் என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.சித்தத்தை அமைதியான குளத்திற்கு ஒப்பிடலாம்.இங்குதான்.அனைத்து பதிவுகளும் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.ஒரு பெரிய நினைவகம்,நினவுகளை சேமித்து வைக்கும் இடம்.பல்வேறு காரணங்களால் இந்த சித்தம் அதிரும் போது அதை மனம் என்கிறோம்

ஒரு சப்தம் வெளியிலிருந்து வருகிறது,அது பொறிகள்(காது) பின்பு புலன்கள் வழியாக சித்தத்தை அதிர வைக்கிறது இன்னதென்று அறியாத அந்த நிலையே மனம்.மனம் அதை புத்தியின் முன் கொண்டுசெல்கிறது.சித்தத்தில் ஏற்கனவே உள்ள பழைய பதிவுகளோடு ஒப்பிட்டுப்பார்த்து அது இன்னதென்று முடிவெடுக்கிறது,இது தான் புத்தியின் வேலை

இந்த உடல் என்பது ஜடப்பொருளின் தொடர்ந்த பிரவாகம் ஆகும்.இதில் ஒவ்வொரு கணமும் சில மூலப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன,ஒவ்வொருகணமும் சில மூலப்பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன.

ஆலயம் என்பது ஆன்மாவை பதியாகிய இறை

பரமாத்மாவாகிய கடவுளின் மீது ஏற்படும் நாட்டமே பக்தி எனப்படுகிறது. இல்வாழ்வில் உள்ளவர்களின் மனதை புலன் மயக்கங்களில் இருந்து விடுவித்து மேன்மையடையச் செய்வதே பக்தியின் நோக்கமாகும். பண்டைய காலங்களில் ப்ரம்மச்சரியம், கிரஹஸ்தம் ஆகிய இரண்டு நிலைகளிலும் பக்தியானது நம்பிக்கையோடு கூடிய ஆரம்ப நிலைப் பயிற்சியாகத்தான் விளங்கியது. வானப்பிரஸ்தம் என்ற ஆசிரமத்தில் நுழையும் போதுதான் அது தீவிரமடைகிறது. அப்போது கிரியையும் வளர்கிறது. அதாவது மலர் பறித்தல், மாலை கட்டுதல், பூஜை முறைகளைக் கையாளுதல், இறை அடியார்களுக்கு தொண்டு செய்தல் போன்ற கிரியைகள். இத்தகைய சரியை, கிரியை வழிகளில் சென்று பாமரர்களும் பயனடையும் பொருட்டு ஆலயங்கள் அமைக்கப்பட்டன. பிற்காலங்களில் பாமரர்கள் கோவிலுக்குள்ளேயே செல்ல முடியாத நிலை உருவாகியது என்பது வேதனையான விஷயம்.

ஆலயம் என்பது ஆன்மாவை பதியாகிய இறைவனோடு லயமாக்குகிற புனிதமான இடம் என்பது பொருள். கோ என்றால் அரசன். அதாவது உலகுக்கே அரசனாகிய இறைவன் வாழும் வீடு, அதுவே கோயில். எனவேதான் உலகிலும், உடலிலும் உள்ள தத்துவங்களை விளக்கும் விதமாக ஆலயங்களும், அதிலமைந்துள்ள மூர்த்தங்களும் அமைக்கப்பட்டுள்ளன. எனவேதான் நம் முன்னோர்கள் ஆலயங்களை அமைப்பதற்கென்று சில ஆகமங்களை உண்டாக்கி வைத்தார்கள். அத்தகைய ஆலயங்களில் சென்று வழிபடுவதற்கும் கூட சில விதிமுறைகள் காணப்படுவது எதற்காகவென்றால், ஆலய வழிபாட்டின் மூலம் மனமானது லயப்பட வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், இன்றைய நிலையோ வேறு விதமாக இருக்கிறது. ஏதோ கோவிலுக்கு போக வேண்டுமே என்ற நிர்பந்தம் இருப்பதாகக் கற்பித்துக் கொண்டு போகிறார்கள். பல ஊர் கதைகளைப் பேசிக் கொண்டு வலம் வருகிறார்கள். உட்காராமல் போனால் சனீஸ்வர பகவானும் அவர்களுடனேயே வீட்டுக்கு வந்து விடுவார் என்று சொல்லி கொஞ்ச நேரம் அமர்ந்து விட்டு போகிறார்கள். இதனால் யாதொரு பயனுமில்லை. உட்காருவது என்றால் தியானத்தில் அமர வேண்டும் என்பதே கருத்து.

மன ஒருமைப்பாடும், ஆன்ம நேயமும், எல்லாம் இறையாற்றலின் சொரூபமே என்ற பரந்த நோக்கும் வளர வேண்டும் என்தற்காகவே ஆலய வழிபாடு அமைந்துள்ளது. மனமானது சிதறலடையாது இறைவனின் பால் செலுத்தப்பட வேண்டும் என்பதே நோக்கம். அதுவே பயிற்சி. மனம், மொழி, மெய் ஆகிய திரிகரண சுத்தியுடன்தான் ஆலயங்களுக்குள் போக வேண்டும் என்பது கோட்பாடு. இறை சிந்தனையல்லாது வேறு எந்த உலக விவகாரங்களும் மனதில் இருக்கக் கூடாது என்பது விதி. நான் என்ற அஹங்கார எண்ணத்தை கொடிமரத்திற்கு முன் உள்ள பலிபீடத்தில் பலியிட்டு விழுந்து வணங்கி விட்டே உள்ளே செல்ல வேண்டும். கூச்சலும், கோஷங்களும் உண்மையான வழிபாடு ஆகா. அமைதியும், சாந்தமும் கொண்ட மனதோடுதான் ஆலய வழிபாடு மேற்கொள்ள வேண்டும். பல மகான்களும், ஞானிகளும் ஆழ்ந்து எண்ணிய ஆழமான, உயர்ந்த எண்ணங்கள் நிரம்பிய இடம் ஆலயமாகும். எனவே வழிபாடு முடிந்தவுடன் சிறிது நேரம் தியானம் செய்ய வேண்டியது கட்டாயமாகும். அவ்வாறு தியானிப்பதன் மூலம் அத்தகைய உயர்ந்த எண்ணங்களும், நோக்கங்களும் தியானிப்பவர்கள் உள்ளங்களிலும் பிரதிபலிக்கும். இதுவே ஆலய வழிபாடு செய்பவர்கள் பெறும் பெரிய பேறாகும்.

இத்தகைய மனப்பான்மையுடன் மக்கள் சென்று வழிபடவழிபட ஆலயத்தின் சக்தியானது இன்னும் அதிகமாகும். ஆலயத்திலிருந்து சக்தியைப் பெறுவதோடு ஆலயத்தின் சக்தியையும் பெருக்கும் சேவையை நாம் செய்கிறோம். ஆலய வழிபாட்டின் ஒப்பற்ற பயன் இதுவேயாகும். அன்புடனும், ஒருமனதுடனும் சேவிப்பவர்களை ஆண்டவன் நல்வழிப்படுத்துவதோடு முடிவில் தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொள்கிறார்.

Wednesday, 30 October 2013

இஞ்சி, சுக்கு, கடுக்காய், உண்ணும் முறை 

கலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு 

மாலையில் கடுக்காய் மண்டலம் 

கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி 

நடப்பவனும் கோலை வீசிகுலாவி நடப்பானே.

சித்தர்கள் இது போன்ற பாடல்கள் வடிவில் எளிய முறையில் நோய் களைத் தீர்க்கும் வழிமுறைகளை வடித்துள்ளனர். ஆனால் இவைகளின் உண்மை விளக்கங்களை கண்டறிந்து அதன் படி உண்டோமானால் பாடல்களில் கண்டபடி உண்மையான பலன்களை அடைய முடியும்.

சித்த மருத்துவ முறையின் தத்துவமே அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பதுதான் அதாவது அண்டம் என்ற பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங் களின் ஒரு பகுதிதான் பிண்டமாகிய நமது உடலிலும் இயங்குகின்றது.

நிலம்,நீர்,நெருப்பு, காற்று, ஆகாயம், என்ற ஐந்து பூதங்களில் நிலம் கீழே நாம் வாழ்வதற்கு ஆதாரமாகவும், ஆகாயம் மேலே சாட்சியாகவும் இருப் பதால் நடுவில் உள்ள நீர், நெருப்பு, காற்று என்ற மூன்று வித சக்திகளை மட்டும் இயங்கும் சக்திகளாக குறிப்பிட்டுள்ளனர்.

எனவேதான் சித்த மருத்துவ முறையில் நாடி பிடித்து நோய்களைக் கணிக்க மூன்று விரல்களைப் பயன்படுத்துகின்றனர். அவை வாதம், பித்தம், கபம் எனப்படும்.

வாதம் - காற்று - 1,மாத்திரை அளவு.
பித்தம் - நெருப்பு - 1/2,மாத்திரை அளவு.
கபம் - நீர் - 1/4-மாத்திரை அளவு.

இது நாடியின் அளவுகளாகும் இதன் படி கையில் நாடி துடித்தால் உடலில் நோய் இல்லை என அர்த்தம்.இந்த நாடி அளவுகளை கூடவோ குறை யவோ அல்லாமல் சமன் படுத்தும் மருந்துகள் தான் மேற்கண்ட பாடலில் உள்ளவை.

வாதம் - காற்று - 1, மாத்திரை அளவு -- சுக்கு.
பித்தம் - நெருப்பு - 1/2,மாத்திரை அளவு -- இஞ்சி.
கபம் - நீர் - 1/4-மாத்திரை அளவு -- கடுக்காய்.

இஞ்சி, சுக்கு, கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத, பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை. அடுத்து ,

சித்த மருத்துவத்தின் அடிப்படையே ஒவ்வொரு மருத்துவ மூலப் பொருட்களிலும் அமிர்தமும் , நஞ்சும் இணைந்துள்ளது என்பதுதான். எனவேதான் சித்தர்கள் இவைகளில் உள்ள நஞ்சுவை நீக்கி மருந்துகளை தயாரிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். சுத்தி முறை எனும் பிரிவு சித்த மருத்துவ முறையில் மட்டுமே உள்ளது.

சுக்குக்கு புற நஞ்சு - கடுக்காய்க்கு அக நஞ்சு எனும் விளக்கம் உள்ளது அதாவது சுக்கில் மேலே உள்ள தோல் பகுதி நஞ்சு எனவும் ,கடுக்காயில் உள்ளே உள்ள கொட்டை நஞ்சு எனவே இவைகளை நீக்கினால்தான் அமிர்தமாக வேலை செய்யும்.

சுக்கு சுத்தி ;

தரமான சுக்கு தேவையான அளவில் வாங்கி சுக்கின் மேல் புறம் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு ஒரு போஸ்ட் கார்ட் கணத்தில் பூசி காயவிடவும். பின்பு மிதமான நெருப்பில் வாட்டவும் சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் சமயம் எடுத்து விடவும். பிறகு நன்கு ஆரிய பின் ஒரு கத்தியால் சுண்ணாம்பை சுரண்ட சுக்கின் மேல் தோலுடன் வந்து விடும் . இதனை இடித்து சலித்து பதனம் செய்யவும்.

கடுக்காய் சுத்தி ;

கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். கொட்டை நஞ்சு எனவே நீக்கிவிடவும். சதைப் பகுதியை இடித்து தூள் செய்யவும்.

இஞ்சி சுத்தி ;

இஞ்சியை சிறிது நீர் விட்டு அரைத்து பிழிந்து சாற்றை வடித்து வைக்கவும் இதை பத்து நிமிடம் கழித்து பார்க்க அடியில் சுண்ணாம்பு போல் வண்டல் இருக்கும் இதுதான் நஞ்சு எனவே மேலே உள்ள தெளிவை மட்டும் எடுத்துக் கொள்ளவும் .

இந்த முறையில் சுத்தி செய்த பிறகு அமிர்தமாக வேலை செய்யும்.

உண்ணும் முறை :

காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்)எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இது பித்தத்தை சமன் செய்யும்.

மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும். இது வாயுவை சமன் செய்யும்.

இரவில் படுக்கும் பொது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீ ரில் கலந்து சாப்பிடவும். இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும். மலம் மிதமாக இளகிப் போகும்.

இதன்படி ஒரு மண்டலம் உண்ண உடலில் இளமை மிடுக்குடன் புத்துணர்ச்சி கிட்டும்.

பழமொழி :

கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்.

ஒரு கடுக்காய் பத்து தாய்க்கு சமம்.

சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுள் இல்லை.

Thursday, 24 October 2013

பால் தயிராவது எப்படி?

பால் தயிராவது எப்படி?

மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன. அதைவிட அதிகமான பாக்டீரியாக்கள் நமக்குப் பல்வேறு உதவிகளைச் செய்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் இல்லையென்றால், நாம் சாப்பிடும் உணவு செரிக்காது. நாமெல்லாம் உயிர் வாழவே முடியாது.

இப்படி சம்பளம் வாங்காமல் நமக்குச் சேவை செய்யும் பாக்டீரியாக்கள் எங்கிருந்து வருகின்றன?

நாமே நிறைய பாக்டீரியாக்களை மறுஉற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம். அவற்றில் ஒன்றுதான் தயிர். உலகிலுள்ள ஒவ்வொரு பொருளுடனும், மற்றொரு பொருள் சேரும்போது வேதிவினை நடக்கிறது. அதேபோல, பாலில் கொஞ்சம் தயிரை ஊற்றி உறை ஊற்றும் போது பாலில் வேதிவினைதான் நடக்கிறது. (சமைப்பதே ஒரு வேதியியல்தான்). பொதுவாக, பாலில் புரதச் சத்து அதிகம். இந்தப் புரதச்சத்துதான் நமது எலும்பு மற்றும் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. பால் தயிராகும்போது, இந்தப் புரதச்சத்து கெட்டியாகி உறையும் செயல்பாடுதான் நடக்கிறது.

ஏற்கனவே உறைந்த தயிரில் "லாக்டோபேசில்லஸ் அசிடோபில்லஸ்' (Lactobacillus acidophilus) என்ற பாக்டீரியா இருக்கிறது. காய்ச்சப்பட்ட பாலில் இந்த உறைந்த தயிரை சிறிதளவு ஊற்றும்போது, பாலில் உள்ள லாக்டோஸ் எனும் சர்க்கரைப் பொருளை இந்தப் பாக்டீரியா நொதிக்கச் செய்கிறது. இதன்மூலம் லாக்டிக் அமிலம் உருவாக்கப்படுகிறது. இதனால் உருவாகும் நேர்மின் ஹைட்ரஜன் அயனியை, பாலின் புரதப் பொருளில் உள்ள எதிர்மின் துகள்கள் ஈர்க்கின்றன. இதன் காரணமாக புரதப் பொருள் சமநிலையை அடைவதால், புரத மூலக்கூறுகள் ஒன்றை ஒன்று எதிர்ப்பதை விட்டுவிட்டு கெட்டியாகி உறைந்துவிடுகின்றன.

லாக்டோ பேசில்லஸ் பாக்டீரியா செயல்படுவற்கு ஏற்ற வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ். அதன் காரணமாகத்தான், பால் காய்ச்சப்பட்ட பிறகு தயிர் உறை ஊற்றப்படுகிறது. ஆறிய பாலையும் சற்று வெப்பப்படுத்தி உறை ஊற்றினால், தயிர் நன்றாக உறையும்.

உடலில் உணவு செரிக்கவும், நோய்கள் குணமாகவும் லாக்டோ பேசில்லஸ் போன்ற நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் தேவை. இதை உணர்ந்து கொண்டுதான் நமது முன்னோர்கள் தயிர், மோரை அதிகம் சாப்பிடச் சொன்னார்கள். நம் வயிற்றுக்குள் செல்லும் உணவை செரிக்க வைப்பதற்கான சில நொதிகளை, இந்த நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் தருகின்றன.

நமது குடும்பம் - சூரியக் குடும்பம்

நமது குடும்பம் - சூரியக் குடும்பம்-Solar System

நமது குடும்பம் - சூரியக் குடும்பம்
சூரியன் முதல் ப்ளூட்டோ வரை. கிரஹங்கள், நிலாக்கள், பாதை, எடை போன்ற முழு விபரம்.
சூரியன் முதல் ப்ளூட்டோ வரை. நிலாக்கள், வெப்பநிலை, எடை போன்ற முழு விபரம் பெற, பெயரில் க்ளிக் செய்யவும்.

பூமி (Earth)

சூரியன் (Sun)

சந்திரன் (Moon)

புதன் (Mercury)

பூமி (Earth)
விட்டம் - மத்தியில்12,756 கி.மீ.
விட்டம் - துருவங்களில்12,714 கி.மீ.
சுழலும் காலம்23.94 மணிகள்
ஈர்ப்பு வேகம்9.8 m/s/s
வெளியேறும் வேகம்11.20 km/sec.
அச்சின் சாய்வுக்கோணம்23.4 டிகிரி
மேற்பரப்பின் வெப்பநிலை
அதிகபட்சம்
குறைந்தபட்சம்
+58 C
-88.3 C
நிலாக்களின் எண்ணிக்கை1
அடர்த்தி (நீர் = 1)5.52

சூரியன் (Sun)
விட்டம் - மத்தியில்1,392,000 கி.மீ.
விட்டம் - துருவங்களில்1,392,000 கி.மீ.
சுழலும் காலம்30 நாட்கள்
ஈர்ப்பு வேகம்273 m/s/s
வெளியேறும் வேகம்620 km/sec.
அச்சின் சாய்வுக்கோணம் --
மேற்பரப்பின் வெப்பநிலை
அதிகபட்சம்
குறைந்தபட்சம்
+6,100 C
+3,870 C
நிலாக்களின் எண்ணிக்கை --
அடர்த்தி (நீர் = 1)1.41

சந்திரன் (Moon)
விட்டம் - மத்தியில்3,476 கி.மீ.
விட்டம் - துருவங்களில்3,476 கி.மீ.
சுழலும் காலம்27.32 நாட்கள்
ஈர்ப்பு வேகம்1.6 m/s/s
வெளியேறும் வேகம்2.38 km/sec.
அச்சின் சாய்வுக்கோணம்6.6 டிகிரி
மேற்பரப்பின் வெப்பநிலை
அதிகபட்சம்
குறைந்தபட்சம்
+138 C
-171 C
நிலாக்களின் எண்ணிக்கை --
அடர்த்தி (நீர் = 1)3.34

புதன் (Mercury)
விட்டம் - மத்தியில்4,878 கி.மீ.
விட்டம் - துருவங்களில்4,878 கி.மீ.
சுழலும் காலம்58.65 நாட்கள்
ஈர்ப்பு வேகம்3.8 m/s/s
வெளியேறும் வேகம்4.30 km/sec.
அச்சின் சாய்வுக்கோணம்0 டிகிரி
மேற்பரப்பின் வெப்பநிலை
அதிகபட்சம்
குறைந்தபட்சம்
+427 C
-212 C
நிலாக்களின் எண்ணிக்கை0
அடர்த்தி (நீர் = 1)5.43

வெள்ளி (Venus)
விட்டம் - மத்தியில்12,104 கி.மீ.
விட்டம் - துருவங்களில்12,104 கி.மீ.
சுழலும் காலம்243.02 நாட்கள்
ஈர்ப்பு வேகம்8.6 m/s/s
வெளியேறும் வேகம்10.62 km/sec.
அச்சின் சாய்வுக்கோணம்-177.3 டிகிரி
மேற்பரப்பின் வெப்பநிலை
அதிகபட்சம்
குறைந்தபட்சம்
+482 C
+446 C
நிலாக்களின் எண்ணிக்கை0
அடர்த்தி (நீர் = 1)5.24

செவ்வாய் (Mars)
விட்டம் - மத்தியில்6,787 கி.மீ.
விட்டம் - துருவங்களில்6,787 கி.மீ.
சுழலும் காலம்24.62 மணிகள்
ஈர்ப்பு வேகம்3.7 m/s/s
வெளியேறும் வேகம்5.01 km/sec.
அச்சின் சாய்வுக்கோணம்23.98 டிகிரி
மேற்பரப்பின் வெப்பநிலை
அதிகபட்சம்
குறைந்தபட்சம்
+27 C
-126 C
நிலாக்களின் எண்ணிக்கை2
அடர்த்தி (நீர் = 1)3.94

வியாழன் (Jupiter)
விட்டம் - மத்தியில்142,754 கி.மீ.
விட்டம் - துருவங்களில்133,659 கி.மீ.
சுழலும் காலம்9.84 மணிகள்
ஈர்ப்பு வேகம்22.9 m/s/s
வெளியேறும் வேகம்59.50 km/sec.
அச்சின் சாய்வுக்கோணம்3.1 டிகிரி
மேற்பரப்பின் வெப்பநிலை
அதிகபட்சம்
குறைந்தபட்சம்
-118 C
-129 C
நிலாக்களின் எண்ணிக்கை16
அடர்த்தி (நீர் = 1)1.31

சனி (Saturn)
விட்டம் - மத்தியில்120,057 கி.மீ.
விட்டம் - துருவங்களில்107,812 கி.மீ.
சுழலும் காலம்10.53 மணிகள்
ஈர்ப்பு வேகம்9.1 m/s/s
வெளியேறும் வேகம்35.60 km/sec.
அச்சின் சாய்வுக்கோணம்26.7 டிகிரி
மேற்பரப்பின் வெப்பநிலை
அதிகபட்சம்
குறைந்தபட்சம்
-179 C
-184 C
நிலாக்களின் எண்ணிக்கை18
அடர்த்தி (நீர் = 1)0.70

யுரேனஸ் (Uranus)
விட்டம் - மத்தியில்51,177 கி.மீ.
விட்டம் - துருவங்களில்49,949 கி.மீ.
சுழலும் காலம்17.23 மணிகள்
ஈர்ப்பு வேகம்8.9 m/s/s
வெளியேறும் வேகம்21.21 km/sec.
அச்சின் சாய்வுக்கோணம்97.9 டிகிரி
மேற்பரப்பின் வெப்பநிலை
அதிகபட்சம்
குறைந்தபட்சம்
-208 C
-212 C
நிலாக்களின் எண்ணிக்கை15
அடர்த்தி (நீர் = 1)1.30

நெப்டியூன் (Neptune)
விட்டம் - மத்தியில்49,520 கி.மீ.
விட்டம் - துருவங்களில்48,203 கி.மீ.
சுழலும் காலம்16.04 மணிகள்
ஈர்ப்பு வேகம்11.0 m/s/s
வெளியேறும் வேகம்23.59 km/sec.
அச்சின் சாய்வுக்கோணம்29.6 டிகிரி
மேற்பரப்பின் வெப்பநிலை
அதிகபட்சம்
குறைந்தபட்சம்
-219 C
-221 C
நிலாக்களின் எண்ணிக்கை8
அடர்த்தி (நீர் = 1)1.64

ப்ளூட்டோ (Pluto)
விட்டம் - மத்தியில்2,345 கி.மீ.
விட்டம் - துருவங்களில்2,345 கி.மீ.
சுழலும் காலம்6.39 நாட்கள்
ஈர்ப்பு வேகம்0.49 m/s/s
வெளியேறும் வேகம்1.16 km/sec.
அச்சின் சாய்வுக்கோணம்94 டிகிரி
மேற்பரப்பின் வெப்பநிலை
அதிகபட்சம்
குறைந்தபட்சம்
-223 C
-234 C
நிலாக்களின் எண்ணிக்கை1
அடர்த்தி (நீர் = 1)2.0

வானம் ஏன் நீல நிறம்

வானம் ஏன் நீல நிறம்-Optics

வானம் ஏன் நீல நிறம்
வழக்கமான க்விஸ் கேள்வி போலாகிவிட்டது இது. இருந்தாலும் உங்களிடம் பதில் உள்ளதா? ஆதிசங்கரர் கூட இதைப் பற்றி கூறியிருக்கிறார்.
puyalBlue Sky வழக்கமான க்விஸ் கேள்வி போலாகிவிட்டது இது. இருந்தாலும் உங்களிடம் பதில் உள்ளதா?
வானத்தில் கானும் நீல நிறம் கடலின் பிரதிபலிப்பல்ல. மாறாக கடல் தான் வானத்தை பிரதிபலிப்பதால் நீல நிறம் பெறுகிறது.
வின்வெளியில் எடுத்த புகைப்படங்களைப் பார்த்தால் சூரிய வெளிச்சம் படும் பொருட்கள் தவிர சுற்றிலும் கருப்பாகவே இருக்கிறது. பூமியிலிருந்து பார்க்கும் போது மட்டும் நீல நிறமாகத் தெரிவதேன்? பூமியின் மேலுள்ள காற்று மண்டலம் தான் காரணம்.
சூரிய ஒளி அனைத்து வண்ணங்களையும் உள்ளடக்கியது. வானவில்லில் அது தன் தோகையை விரித்து ஏழு வர்ணங்களைக் காட்டுகிறதே, அதனுள் மற்ற வர்ணங்களும் அடக்கம். அவை அனைத்தும் ஒளியே, ஆயினும் வர்ண வேறுபாடுகளுக்கு காரணம் அந்த ஒளியின் அலைநீளம் மற்றும் துடிப்பு (frequency). வானவில்லின் வண்ணங்களில் நீல நிறம் மிக அதிகத் துடிப்புடனும், சிவப்பு மிகக் குறைந்த துடிப்புடனும் இருப்பவை.
ஒளி காற்று மண்டலத்தில் இடையூறில்லாமல் பயணம் செய்தாலும், காற்றிலுள்ள அணு மூலக் கூறுகள், நீர்த்துளிகள், பனிமூட்டம் போன்றவை ஒளியைச் சிதறடிக்கின்றன. சிதறிய ஒளி மேலும் மேலும் சிதறடிக்கப்படுகிறது. இவ்வாறு நடைபெறும் போது மிக அதிகத்துடிப்புடைய நீல நிறம் மிக அதிகமாக சிதறடிக்கப்படுகிறது. (சிவப்பு மிகக்குறைவாக சிதறுகிறது.)
நாம் 'பார்ப்பது' என்பது ஒளி நமது கண்ணில் வந்து படும்போது மட்டுமே. நாம் பார்க்கும் பொருட்கள் எல்லாமே அதில் பட்டு திரும்பும் ஒளி நமது கண்ணை வந்தடைவதால் தான். அதனால் தான் 'பார்ப்பதற்கு யாருமே இல்லாவிட்டால் வானம் எப்படி நீல நிறமாக இருக்கும்' என்று ஆதி சங்கரர் கேட்டார். இதைப்பற்றி சற்று தெளிவாகப் 'பார்க்கலாம்'!
உதாரணமாக: நாம் பார்க்கும் பருத்தி உடை பச்சை நிறம் என்றால், அந்த உடையில் படும் ஒளியில் பச்சை நிறத்திற்கான துடிப்பு மட்டும் திரும்பி வருகிறது, அது நம் கண்களில் படும் போது பச்சைச் சட்டை என உணருகிறோம். இருட்டில் எதுவும் கண்ணுக்கு தெரியாததன் காரணமும், பொருட்களில் இருந்து எந்த ஒளியும் நம் கண்ணுக்கு வந்து சேராதது தான். இதனால் தான் பனிமூட்டத்தில் அருகில் இருக்கும் நபர் கூட தெரிவதில்லை, மேகமில்லாத இரவில் நெடுந்தொலைவிலிருக்கும் நட்சத்திரத்தைக்கூட நம்மால் 'பார்க்க' முடிகிறது.
காற்று மண்டலத்தில் பலமாக சிதறடிக்கப்படும் நீல நிறமே மற்ற நிறங்களை விட பெருமளவில் நமது கண்ணில் வந்து விழுகிறது. ஆகவே தான் வானம் நீல நிறம். இரவில் நிலவின் ஒளி, நட்சத்திரங்களின் ஒளி ஆகியவை பலம் குறைந்த ஒளியாக இருப்பதால் அந்த சிதறல்கள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. நேராக வரும் ஒளியை மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது.

Monday, 21 October 2013

திருவாசகம்/சிவ புராணம்

திருவாசகம்/சிவ புராணம்
நம சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழியாண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க!
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க!
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க!
புறத்தார்க்கு சேயோந்தன் பூங்கழல்கள் வெல்க!
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!
ஈசன் அடி போற்றி ! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி ! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
சிவன் அவனென் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கி
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் !
கண்ணுதலான் தன்கருணை கண் காட்ட வந்தெய்தி
என்னுதற்கெட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும் சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
புல்லாகி பூடாகி புழுவாய் மரமாகி
பல் விருகமாகி பறவையாய் பாம்பாகி
கல்லா மனிதராய் பேயாய் கனங்களாய்
வல்லசுரராகி முனிவராய் தேவராய்
செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே
வெய்யாய் தனியாய் இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞானமாகி மிளிர்கின்ற மெய் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்ப பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னை புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே
கரந்த பால் கன்னலொடு நெய் கலந்தாற் போல
சிறந்தடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓரைந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம் பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்தெங்கும் புழு அழுக்கு மூடி
மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்க புலன் ஐந்தும் வஞ்சனையை செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்கு
கலந்து அன்பாகி கசிந்துள் உருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள் கழல்கள் காட்டி
நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதியே மலர்ந்த மலர் சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரானே
பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே
நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
பேராது நின்ற பெரும் கருணை பேராறே
ஆராஅமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக் குடம்பின் உட்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.
திருச்சிற்றம்பலம்