அமுதகலசம்
Wednesday, 12 February 2014
தமிழ்த்தாமரை: GK TAMIL- 3
தமிழ்த்தாமரை: GK TAMIL- 3: மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம்- சீவக சிந்தாமணி தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை,வாயுரை வாழ்த்து...
திருமந்திரம்
மாணிக்கத்
துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றில் ஆடுந் திருக்கூத்தைப்
பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே. – (திருமந்திரம் – 131)
விளக்கம்:
மாணிக்கத்துள்ளே மரகத சோதி
சுத்தமான தங்கத்தினால் ஆன அம்பலத்தில் உமையம்மையுடன்
சிவபெருமான் ஆடுகிற கூத்து, மாணிக்கம்
போன்ற சிவந்த ஒளியினுள் மரகதம் போன்ற பச்சை ஒளி கலந்தது போலவும், மாணிக்க மாளிகைக்குள்ளே மரகத மாடம் காணப்படுவது
போலவும் இருக்கிறது. அப்படிப்பட்ட திருக்கூத்தைக் கண்டு வணங்கும் வரத்தை பெற்றவர்கள் சிவ யோகியர்.
சிவனின்
நிறம் செம்மையானதாகவும், சக்தியின்
நிறம் பசுமையாகவும் இருப்பதால், மாணிக்கத்துள்ளே
மரகத சோதியாய் என திருமூலர் பாடியுள்ளார்.
எவ்வாறு
காண்பான் அறிவு தனக்கெல்லை
அவ்வாறு அருட்செய்வன் ஆதிஅரன் தானும்
ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும்
செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கமே. –
(திருமந்திரம் –
130)
விளக்கம்: சிவனைக் காண விஷேச ஆன்ம அறிவு தேவையில்லை!
பக்தர்கள் ஒவ்வொருவரும், தமது அறிவின் எல்லைக்கேற்ப தனக்குத் தெரிந்த
முறையில் சிவபெருமானை அணுகுகிறார்கள். அந்தச் சிவபெருமானும் பக்தர்கள் தன்னை எப்படி
அணுகுகிறார்களோ, அந்த
வழியிலேயே அவர்களுக்கு அருள் செய்கிறான். அந்தப் பழமையான சிவன் ஒப்பில்லாத சபையிலே
உமையம்மை காண நடனம் செய்பவன். அந்த நடனத்தின் போது, சிவபெருமான் செவ்வானத்தை விடச் சிவந்த ஒளி
வீசும் மாணிக்கமாகத் திகழ்கிறான்.
சிவனை
அணுகுவதற்கென்று விஷேசமான அறிவெல்லாம் தேவையில்லை. அவரவர் அறிவின் எல்லை அறிந்து,
சிவன் அதற்கேற்றபடி தன்னைக்
காட்டிக் கொள்வான்.
தூங்கிக்கண்
டார்சிவ லோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே. –
(திருமந்திரம் –
129)
விளக்கம்:
அந்த பேரின்ப நிலையை விளக்க முடியாது
யோக நிலையில் உள்ள சித்தர்கள் சிவலோகத்தை தம்முள்ளே
காண்கிறார்கள். அங்கே அவர்கள் தாம் சிவனோடு பொருந்தி இருப்பதை உணர்கிறார்கள். சிவத்தோடு
பொருந்தி இருந்து, பேரின்பன்மான
சிவபோகத்தை அனுபவிக்கிறார்கள். அந்த இன்ப நிலை அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
அதைச் சொல்லினாலோ எழுத்தினாலே விளக்க முடியாது.
சோம்பர்
இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடம்
சோம்பர் கண் டார்அச் சுருதிக்கண் தூக்கமே. –
(திருமந்திரம் –
128)
விளக்கம்:
வேதத்தினாலும் எட்ட முடியாத நிலை
தனக்கென்று எந்த செயலும் இல்லாமல் இருக்கும் சித்தர்களைச்
சோம்பர் என்கிறார் திருமூலர். அவர்கள் சுத்தமான
வெளியிலே பேரின்பத்தை அனுபவித்து, தன்னிலை
மறந்து அங்கேயே கிடப்பார்கள். அந்த பேரின்ப நிலை, வேதத்தினாலும் எட்ட முடியாதது. அந்த பேரின்ப
நிலையில் வேதங்களை எல்லாம் அவர்கள் மறந்து விடுவார்கள். அவர்களுக்குத் தெரிவதெல்லாம்
சிவமாகிய பேரின்பம் மட்டுமே.
சுருதி
என்றால் எழுத்து மூலம் இல்லாமல் வாய் மொழியினால் கற்ற வேதம். வேதங்களுக்கு ஆரம்பத்தில்
எழுத்து உரு கிடையாது, வாய்மொழியாகத்
தான் கற்பிக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு தான், வேதங்கள் எழுத்து உருவில் பதிவு செய்யப்பட்டன.
இருந்தார்
சிவமாகி எங்குந் தாமாகி
இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி
இருந்தார் முக்காலத்து இயல்பைக் குறித்தங்கு
இருந்தார் இழவுவந்து எய்திய சோம்பே. – (திருமந்திரம் – 127)
விளக்கம்:
எல்லாவற்றிலும் சிவனின் செயலைக் காணலாம்!
திருமந்திரம் ஒன்பது ஆகமங்கள் முக்கியமானவை
சிவமாம்
பரத்தினில் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமமெங்கள் நந்திபெற் றானே. – (திருமந்திரம் – 62)
இருபத்தெட்டு
ஆகமங்களுள் ஒன்பது ஆகமங்கள் முக்கியமானவை. அவற்றை சிவமான பரம்பொருளிடம் இருந்து சத்தியும்
சதாசிவமும், உள்ளத்துக்கு
உகந்த மகேசர், உருத்திரர்,
தவம் செய்த திருமால்,
நான்முகன் ஆகியோர் பெற்றார்கள்.
இவர்களோடு நந்தியம்பெருமானும், அந்த
ஒன்பது ஆகமங்களைத் தான் பெற்று நமக்கு உரைத்தான்.
திருமந்திரம் ஞானம் 5
பெற்றார்
உலகிற் பிரியாப் பெருநெறி
பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்
பெற்றார் அம்மன்றில் பிரியாப் பெரும்பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே. – (திருமந்திரம் – 132)
விளக்கம்: சிவயோகியர் அடையும் பேறு
சிவயோகியர் சிவ உலகை விட்டு நீங்காத மன நிலையை அடைவார்கள்.
அதனால் அவர்களுக்கு பிறவாமை என்கிற பெரும் பயன் வந்து சேரும். அந்த யோகியர் சிவபெருமான்
திருக்கூத்தாடும் அம்பலத்தை விட்டு பிரியாத பெரும்பேறு அடைவார்கள். சிவ உலகில் திளைத்திருக்கும்
அவர்கள் உலக விஷயங்களைப் பற்றி பேச மாட்டார்கள்.
திருமந்திரம் ஞானம் 4
பெருமை
சிறுமை அறிந்தெம் பிரான்போல்
அருமை எளிமை அறிந்தறி வார்ஆர்
ஒருமையுள் ஆமைபோல் உள்ஐந்து அடக்கி
இருமையுங் கேட்டிருந் தார்புரை அற்றே. –
(திருமந்திரம் –
133)
விளக்கம்:
ஒருமையுள் ஆமை போல!
சிவபெருமான்
பக்தர்களாகிய நம் பெருமைகளையும், சிறுமைகளையும்
அறிந்து கொள்வதில் வல்லவர். பெருமை உடையர்க்கு எளிதாகக் காட்சி தருகிறார், சிறுமை உடையவர்க்கு அரிதாகக் காட்சி தருகிறார்.
உடல் உறுப்புக்களை தனது ஓட்டிற்குள் அடக்கிக்
கொள்ளும் ஆமை போல, ஐந்து
புலன்களையும் உள்ளடக்கி இருப்பவர்கள், இந்த உலகிலும், மறு
உலகிலும் இன்பம் அடைந்து, குற்றமற்றவர்களாக
இருப்பார்கள்.
திருமந்திரம் ஞானம் 3
புரைஅற்ற
பாலினுள் நெய்கலந் தாற்போல்
திரைஅற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற்று உணர்வோர் உடம்பிங்கு ஒழிந்தால்
கரையற்ற சோதி கலந்தசத் தாமே. – (திருமந்திரம் – 134)
விளக்கம்:
உபதேசம் பெற தெளிந்த மனம் அவசியம்
குற்றம் இல்லாத பாலில் நெய் கலந்திருப்பதைப் போல,
அலையற்ற மனத்தில்,
குருவாகிய ஆசிரியர் சொல்லும்
உபதேசம் பேதமில்லாமல் நிறைந்து நிற்கும். பேச்சற்ற மவுன நிலையில் நாம் அதை உணரலாம்.
உபதேசப் பொருளை உணர்ந்தோர்க்கு உடம்பு இங்கு அழிந்தாலும், கரையற்ற சோதியாம் மெய்ப்பொருளில் கலந்து
விடலாம்.
குழப்பம்
இல்லாத தெளிந்த மனத்தில் குருவின் உபதேசம் நன்றாக பதியும். உபதேசப் பொருளை நன்கு உணர்ந்தவர்கள்
தன் வாழ்நாள் இறுதியில் மெய்ப்பொருளாம் சிவசோதியோடு கலந்து விடுவார்கள்.
(புரை
– குற்றம், திரை
– அலை, ஆரியன்
– குரு, ஆசிரியர், உரையற்று
– பேச்சற்று, சத்து
– மெய்ப்பொருள்)
திருமந்திரம் ஞானம்.2
சத்தமுதல்
ஐந்துந் தன்வழித் தான்சாரில்
சித்துக்குச் சித்தன்றி சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியிற் சுடறிற் சுடர்சேரும்
அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே. – (திருமந்திரம் – 135)
விளக்கம்:
நமக்கு வேறு போக்கிடம் கிடையாது
பஞ்ச பூதங்களால் ஆன நம்முடைய உடல், ஐந்து தன்மாத்திரைகளான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவற்றைச் சார்ந்திருக்கின்றன. ஆனால் நமது ஆன்மாவிற்கு பரமாத்மாவான
சிவனை விட்டால் சேர்விடம் வேறு ஏது? சுத்தமான பரவெளியில் நம்முடைய ஆன்மா என்னும் சுடர், பேரொளியாகிய அந்த சிவனைச் சேரும். இதைப்
புரிந்து கொண்டு, அந்த
சிவனது அருட்கடலில் நாம் கலந்திருப்போம்.
நம்முடைய
உடல் தன்னுடைய மூலமான ஐம்பூதங்களைச் சார்ந்திருக்கிறது. அது போல நம்முடைய ஆன்மா,
தன்னுடைய மூலமான பரமாத்மாவை
சார்கிறது.
திருமந்திரம் ஞானம்.
அப்பினில்
கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பெனப் பேர்ப்பெற்று உருச்செய்த அவ்வுரு
அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோல்
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே. –
(திருமந்திரம் –
136)
விளக்கம்:
நாமெல்லாம் உப்பு பொம்மைகள்
கடல் நீரில் உள்ள உப்புத் தன்மை சூரியனின் வெப்பத்தினால் உப்பு
என்கிற பெயருள்ள உருவம் பெறுகிறது. அந்த உப்பு மறுபடியும் நீரில் கலக்கும் போது நீரோடு
நீராக மாறி விடும். அது போலவே நம்முடைய சீவனும் சிவத்தினில் இருந்து உருவம் பெற்று
வந்துள்ளது. நமது ஆயுள் முடியும் போது, நாம் மறுபடியும் சிவத்தினுள் கலந்து விடுவோம்
Tuesday, 11 February 2014
வேம்பு.!
வேம்பு தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும், வாழ்வோடும், வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்து விட்ட ஒன்றாகும். சங்க இலக்கியங்களிலேயே “தெய்வம் சார்ந்த பராரை வேம்பு” என்று வேம்பு சிறப்பிக்கப்படுகிறது.
இப்படிப்பட்ட வேம்பு மருந்தாகித்த தப்பா மரம் என்பதை சித்தர்கள் அறிந்தனர். அவர்கள் சொன்னவற்றை இன்றைய விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொள்கின்றனர். இன்று வரை 30-க்கும் மேற்பட்ட தாவர இரசாயனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இலை, பட்டை, விதையிலுள் தைலம் பலவகையான பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.Streptomycinie போன்ற மருந்துக்கும் கட்டுப்படாத காசநோய் கிருமிகள் வேப்ப எண்ணெய்க்கு கட்டுப்படுவதாக ஆய்வு அறிக்கைகள் சொல்லுகின்றன.
லக்னோவிலுள்ள King George மருத்துவக் கல்லூரியில் செய்த ஆய்வின் மூலம் வேப்பிலை மோசமான தோல் நோய்களையும் கட்டுப்படுத்தும், மேலும் குடல் புழுக்களையும் அகற்றும் ஆற்றல் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேகாலாயவில் உள்ள பழங்குடி மக்கள் இதய நோய்க்கும், காச நோய்க்கும் வேப்பம் பழங்களையும், இலைகளையும் பயன்படுத்துகிறார்கள்.வேப்பெண்ணெய்க்கு விந்துவிலுள்ள உயிர் அணுக்களைச் செயல் இழக்கச் செய்யும் ஆற்றல் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கண்டறிந்துள்ளது.
வேப்பிலையிலுள்ள குயிர் சிடின் என்னும் சத்து Bacteria-க்களைக் கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.வேப்ப எண்ணெய்யை சிதைத்து வடித்துப் பெறும் பைரோனிமின் மூலம் Rocketகான உந்துவிசை மாற்று எரிப்பொருளைப் பெறலாம் என்கின்றனர்.
எலிகளுக்கு வேப்பிலை சாற்றைக் கொடுத்து ஆராய்ந்ததில் அது கருத்தரிக்கும் ஆற்றலை 11-வது வாரத்தில் முற்றிலும் இழந்து விட்டதை அறிந்தனர். சாறு கொடுப்பதை நிறுத்தி விட்டால் மீண்டும் கருத்தரிக்கும் ஆற்றல் பெற்று விடுவதையும் கண்டுள்ளனர்.
நிலத்தின் அமிலத் தன்மையை நிலப்படுத்தும் தன்மையிலும், காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதிலும் வேம்பு தன்னிகரற்றது.வேப்பம் பூவிலிருந்து அடுத்த சத்து 3 வகையான நுண்புழுக்களைக் கட்டுப்படுத்துவதாக சித்திக் ஆலம் என்னும் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
சுற்றுச் சூழலை பாதுகாத்து நிலைப்படுத்தும் ஆற்றல் வேம்பிற்கு உள்ளது. காற்றில் கலந்துள்ள தூசியை வடிகட்டும் திறனும், Anthro cyanine என்னும் நச்சு வாயுக்களை ஈர்த்துக் கொள்ளும் பண்பும் வேம்பிற்கு இருப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றனர்.
வேம்பு வெளியிடும் பிராகிபிடின் என்னும் வேதிப்பொருள் காற்றில் கலந்து மனிதனையும் தாவரங்களையும் தாக்கும் கிருமிகளை இயங்க விடாமல் தடுத்து அழிக்கிறது என்று Dr.சக்சேனா கண்டறிந்துள்ளனர்.
வேப்பம் விதைக்கும், எண்ணெய்க்கும் பிண்ணாக்கிற்கும்-123க்கும் மேற்பட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.வேம்பு Meliazia தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.
வேறுபெயர்கள்
அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்திரம், பிசுமந்தம், வாதாளி.
மருத்துவப் பண்புகள்
இலை
1)புழு, பூச்சிகளால் நேரிடும் துன்பங்களை ஒழிக்கும்.
2)வேப்பங்கொழுந்தும், எள்ளும் சேர்த்து அரைத்துப் பூசிவர ஆறாத நாட்பட்ட புண்கள் ஆறும்.
3)வேப்பிலையை கற்ப முறைப்படி சாப்பிட்டு வர எந்த நோயும் அணுகாது.
4)வேப்பிலைச் சாறு + பழச்சாறு கலந்து படுக்கபோகும் முன் அருந்த ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.
பூ
பூவை குடிநீரிட்டு குடிக்க குன்ம நோய் தீரும்.
காய் + பழம்
தோல் நோய் தீரும்.
விதை
1)மூலம், தோல் நோய், சூதக சன்னி, குடல் கிருமி, நரம்புப் பிரிவு நீங்கும்.
2)விதை + கசகசா + தேங்காய் பால் சொறி, சிரங்கு, நமைச்சல், தேமல் தீரும்.
நெய்
1)துஷ்ட புண்கள் தீரும்.
2)ஆராத இரணங்கள் தீரும்.
வேப்பம் பட்டை
1)வேப்பம் பட்டை + திப்பிலி குடிநீர் இடுப்பு வாதம், கீல் வாதம் தீரும்.
2)கஷாயம் குட்டம் தீரும்.
அதிகமான மருந்துகளைப் பயன்படுத்தினால், மரபியல் குணங்களை நிர்ணயிக்கும் Chromosomes சிதைவுறுவதாக தற்கால ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. வேம்பு Chromosome களை பாதிக்காமல் நோய்க் கிருமிகளை மட்டும் அழிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.
பிசின்
1)மேக நோயைப் போக்கும்.
குறிப்புகள்
பூவைத் தலையில் வைக்க ஈறும் பேணும் தீரும்.
100 வயதான வேப்பமரப் பட்டையை நிழலில் உலர்த்திச் சூரணித்து பாலில் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். நோய் அணுகாது.
பூச்சாறு + நெல்லிக்காய் சாறு கலந்து தர எந்த நோயும் அணுகாது, தோல் பளபளக்கும், இரத்தம் சுத்தமாகும்.
வேப்பமுத்து, மிளகு, கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து எண்ணெய்யில் கலந்து தலைக்குத் தேய்த்து முழுகி வரப் புழுவெட்டு மாறும். முடி செழித்து வளரும்.
வேப்பம்பட்டைத் + தூள் கரிசாலை + மல்லிச் சாறு 7 முறை பாவனை செய்து 1 மண்டலம் தேனில் உண்ண உடல் கருங்காலி மரம் போல் வலிமை உடையதாகும். விந்து கட்டும்
வேப்பம்பூ + வேப்ப எண்ணெய் கலந்து காய்ச்சி காதுக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தக் காதில் உள்ள பூச்சிகள் வெளிப்படும். காது வலி, காது சீழ் மாறும்.
நம் வீடுகளில் வேம்பு வளர்ப்பது ஐதீகமாகக் கருதப்பட்டாலும், அதன் தத்துவம் என்னவென்றால் வேம்பை சுற்றி 10 ஆநவசந நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ளதென்றும், காற்றானது தூய்மையுறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
Top of Form
Bottom of Form
Subscribe to:
Posts (Atom)
