திருவாசகம்/சிவ
புராணம்
நம சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான்
தாள் வாழ்க!
கோகழியாண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள்
வாழ்க!
ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க!
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க!
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன்
பெய்கழல்கள் வெல்க!
புறத்தார்க்கு சேயோந்தன் பூங்கழல்கள்
வெல்க!
கரம் குவிவார் உள் மகிழும் கோன்
கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன்
கழல் வெல்க!
ஈசன் அடி போற்றி ! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி ! சிவன் சேவடி
போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி
போற்றி!
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி
போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
சிவன் அவனென் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கி
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன்
யான் !
கண்ணுதலான் தன்கருணை கண் காட்ட
வந்தெய்தி
என்னுதற்கெட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய்
விளங்கொளியாய்
எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்
சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
புல்லாகி பூடாகி புழுவாய் மரமாகி
பல் விருகமாகி பறவையாய் பாம்பாகி
கல்லா மனிதராய் பேயாய் கனங்களாய்
வல்லசுரராகி முனிவராய் தேவராய்
செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன்
எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று
வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே
வெய்யாய் தனியாய் இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞானமாகி மிளிர்கின்ற மெய் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்ப பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
ஆக்கம் அளவு இறுதி இல்லாய்
அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்
தருவாய்
போக்குவாய் என்னை புகுவிப்பாய் நின்
தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே
கரந்த பால் கன்னலொடு நெய் கலந்தாற்
போல
சிறந்தடியார் சிந்தனையுள் தேன் ஊறி
நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓரைந்துடையாய் விண்ணோர்கள்
ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான்
வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம் பாவம் என்னும் அரும் கயிற்றால்
கட்டி
புறம்தோல் போர்தெங்கும் புழு அழுக்கு
மூடி
மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்க புலன் ஐந்தும் வஞ்சனையை செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்கு
கலந்து அன்பாகி கசிந்துள் உருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள் கழல்கள்
காட்டி
நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதியே மலர்ந்த மலர் சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரானே
பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே
நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம்
கெடப்
பேராது நின்ற பெரும் கருணை பேராறே
ஆராஅமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய்
நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கு அன்பனே யாவையுமாய்
அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப்
பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை
பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு
உணர்வார் தம்கருத்தில்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்
உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப்
புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர்
ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய்
நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்
உணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே
வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என்
சிந்தனையுள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக் குடம்பின்
உட்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு
மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி
சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க
வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும்
நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி
நாட்டானே
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித்
திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து
சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன்
அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.
திருச்சிற்றம்பலம்
hai
ReplyDelete