அமுதகலசம்

அமுதகலசம்

Tuesday, 13 May 2014

திருத்தூதர்களின் மரணம்

திருத்தூதர்களின் மரணம்

கிறித்தவப் மரபுப்படி திருத்தூதர்களின் மரணம்:
  • பேதுரு என்னும் சீமோன், - தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டார் - கிபி 64.
  • செபதேயுவின் மகன் யாக்கோபு - தலை கொய்யப்பட்டு இறந்தார் (கிபி 44) (மறைசாட்சியாக இறந்த முதல் திருத்தூதர்)
  • செபதேயுவின் மகன் யோவான் - வயது முதிர்ந்து இறந்தார் (இயற்கை மரணம் எய்திய ஒரே திருத்தூதர்)
  • அந்திரேயா - X-வடிவ சிலுவையில் அறையப்பட்டார்
  • பிலிப்பு - சிலுவையில் அறையப்பட்டார் - கிபி 54.
  • பர்த்தலமேயு, (நத்தானியேல்) - தோல் உரிக்கப்பட்டு, தலை வெட்டுண்டு இறந்தார்.
  • மத்தேயு - கோடரியால் வெட்டுண்டு இறந்தார் - கிபி 60.
  • தோமா, - ஈட்டியால் குத்தப்பட்டு இறந்தார் - கிபி 72.
  • அல்பேயுவின் மகன் யாக்கோபு - சிலுவையில் அறையப்பட்டு, கல்லாலும், தடியாலும் அடியுண்டு மரித்தார்
  • யூதா ததேயு, - சிலுவையில் அறையப்பட்டார்
  • தீவிரவாதியாய் இருந்த சீமோன் - சிலுவையில் அறையப்பட்டார் - கிபி 74.
  • யூதாசு இஸ்காரியோத்து - தற்கொலை செய்து கொண்டார்
யூதாசு இஸ்காரியோத்துக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியா, கல்லால் அடிக்கப்பட்டு, தலை வெட்டுண்டு இறந்தார்.

No comments:

Post a Comment