முட்டையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
முட்டையில் எவ்வளவு தான் கொலஸ்ட்ரால் இருந்தாலும், அவை இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்காது. பொதுவாக கொலஸ்ட்ரால் உள்ள பொருட்களை டயட்டில் சேர்த்து, இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று சொல்வது தவறு. ஏனெனில் சாதாரணமாக நம் உடலில் உள்ள கல்லீரலானது அன்றாடம் கொலஸ்ட்ராலை அதிக அளவி உற்பத்தி செய்யும். எப்போது கொலஸ்ட்ரால் நிறைந்த முட்டையை அதிகம் எடுத்து வருகிறோமோ, அப்போது கல்லீரலானது கொலஸ்ட்ரால் உற்பத்தியை குறைத்துவிடும். இதனால் இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.
எடையை பராமரிக்கும்
முட்டையில் எவ்வளவு தான் கொலஸ்ட்ரால் இருந்தாலும், அவை உடல் எடை அதிகரிப்பதை தடுத்து, எடையைப் பராமரிக்கும்.
கண் ஆரோக்கியம்
முட்டையின் மஞ்சள் கருவில் லூடீன் மற்றும் ஜியாசாந்தின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் வளமாக நிறைந்திருப்பதால், அவை கருவிழியை பாதுகாத்து, கண்களில் பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த எத்தனை உணவுப் பொருட்கள் இருந்தாலும், முட்டைக்கு இணையாது எதுவும் வர முடியாது. ஏனெனில் முட்டையில் அந்த அளவில் சத்துக்களானது நிறைந்துள்ளது. இத்தகைய சத்துக்களால் அவை உடலின் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பு தருகிறது. குறிப்பாக முட்டையில் புரோட்டீன்கள், வைட்டமின்கள், அமினோ ஆசிட்டுகள், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகள் போன்றவை நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத கோலைன் என்ற சிறப்பான பொருள் முட்டையில் அடங்கியுள்ளது.
எனவே முட்டையை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. அதிலும் முட்டையை வேக வைத்து சாப்பிடுவது இன்னும் சிறப்பானது. முக்கியமாக வளரும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டையை காலை வேளையில் சாப்பிடக் கொடுத்தால், அவர்களின் வளர்ச்சி சீராகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
இங்கு முட்டையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த நன்மைகளைப் படித்து, இன்றிலிருந்து தினமும் ஒரு முட்டையை சாப்பிட்டு வாருங்கள்.

No comments:
Post a Comment