அமுதகலசம்

அமுதகலசம்

Friday, 14 November 2014

test siddha medicine

சித்த மருந்துகளின் பரிசோதனைகள் சித்த மருந்துகளின் பரிசோதனைகள் 1.பற்ப செந்தூரங்களின் பொதுவனான சோதனை: விரலின் ரேகை பற்ப செந்தூரங்களில் பதிய வேண்டும். 2.சுண்ணங்களின் பொதுவனான சோதனை: சுண்ண வகைகளை மஞ்சள் விட்டு நீர் விட்டு கலக்கும்போது,சிவப்பு வர வேண்டும் 3.வங்க பற்ப சோதனை: வங்க பற்பம் – 1 பங்கு படிகாரம் – 1/8 பங்கு, நவாச்சாரம் - 1/8 பங்கு இவ்வகைகளை கல்வத்தில் அரைத்து,மூசையில் வைத்து ஊத,மருந்து சரியான முறையில் முடியாத போது,உலோகம் இருந்தால் உருகி வெளிவரும். 4. நாக பற்ப சோதனை: நாக பற்பம் 2 பங்கு படிகாரம் – 1/8 பங்கு, நவாச்சாரம் - 1/8 பங்கு இவ்வகைகளை கல்வத்தில் அரைத்து,மூசையில் வைத்து ஊத,மருந்து சரியான முறையில் முடியாத போது,உலோகம் இருந்தால் உருகி வெளிவரும். 5.வெள்ளி பற்ப சோதனை: வெள்ளி பற்பம் 1 பங்கு, வெங்காரம் – 1/4 பங்கு, கருவங்கம் - 1/4பங்கு,செம்புத்தூள் - 1/4பங்கு, இவ்வகைகளை கல்வத்தில் அரைத்து,மூசையில் வைத்து ஊத வெட்டையாகும்.இவ்வெட்டையை, கரி நெருப்பிலிட்டு முன் போலவும் ஊத,மருந்து சரியான முறையில் முடியாத போது,உலோகம் இருந்தால் உருகி வெளிவரும். 6.தங்க பற்ப சோதனை: · தங்க பற்பம் 1 பங்கு, வெங்காரம் – 1/4 பங்கு, கருவங்கம் - 1/4பங்கு,செம்புத்தூள் - 1/4பங்கு, இவ்வகைகளை கல்வத்தில் அரைத்து,மூசையில் வைத்து ஊத வெட்டையாகும்.இவ்வெட்டையை, கரி நெருப்பிலிட்டு முன் போலவும் ஊத,மருந்து சரியான முறையில் முடியாத போது,உலோகம் இருந்தால் உருகி வெளிவரும். · உலோகத்திற்குள்ள எந்த மினுமினுப்பும் இருக்க்கூடாது 7. தாம்பிர பற்ப சோதனை; · தாம்பிர பற்ப - 1 பங்கு, வெங்காரம் – 1/4 பங்கு, கருவங்கம் - 1/4பங்கு,இவ்வகைகளை கல்வத்தில் அரைத்து,மூசையில் வைத்து ஊத,மருந்து சரியான முறையில் முடியாத போது,உலோகம் இருந்தால் உருகி வெளிவரும். · தாம்பிர பற்ப முடிந்த்தாயின்,கனிந்த வாழை பழத்தில் சிறிது பற்பத்தை வைத்து,1 இரவு கழித்து எடுக்க வாழைபழம் கல் போல் இறுகியே காணும். 8.அயச்செந்தூர சோதனை: அயச்செந்தூரம் முடிந்த்தாயின், நீரிலிட்டால் மிதக்கும்.அது காந்த்திற்கு ஒட்டக் கூடாது. 9.அப்பிரக சோதனை · அதில் தளுக்கு இருக்க கூடாது. · விரிசல் விழுந்த மட்கலயத்தில் நீர் விட்டு அதினுள்,அப்பிரக பற்ப இட நீர் கசிவு இருக்க்கூடாது. 10.மிருதார் சிங்கி பற்ப சோதனை: இரும்பு கரண்டியிலிட்டு சிறிது,வெங்காரம், நல்லெண்ணெய் விட்டு எரிக்கவும்.ஈயம் வர கூடாது

No comments:

Post a Comment